பக்கம் எண் :

562

     இரண்ய நாமம் ஒலிக்காத இடம் எங்காவது இருந்தால் கூறுங்கள் அங்கு
சென்று நாமெல்லாரும் ரஹஸ்யமாய் இரண்யவதம் செய்வது பற்றிப் பேசலாம்
என்று சொன்னதும், பூவுலகில் ஸ்ரீமந் நாராயணனை சீராப்தி நாதனாகக் காண
வேண்டுமென்று “கதம்பரிஷி” கடுந்தவம் புரிகிறார். எந்நேரமும் நாராயண
மந்திரம் ஒலித்துக்கொண்டிருக்கும் அந்த ஒரு ஆஸ்ரமம் தான்
இரண்யாதிக்கம் செல்லாத இடம். இப்போது நாம் கூடிப் பேசுவதற்கு அதுவே
உகந்த இடம் என்று பிரம்மதேவன் கூற தேவர்களும் மும்மூர்த்திகளும்
கதம்பரிஷியின் ஆஸ்ரமத்திற்கு எழுந்தருளி, அம்முனிவரின் தவப்பயனாக
சீராப்திநாதனாக எம்பெருமான் அவனுக்கு காட்சி கொடுத்து, இரண்ய
சம்ஹாரத்தைப் பற்றி பேசி முடித்தனர். பேசி முடித்தபின், மற்றெல்லோரையும்
கதம்பரிஷியின் ஆஸ்மரத்திலேயே மறைந்திருக்கச் செய்து தான் மட்டும்
திருப்பாற்கடலுக்கு எழுந்தருளினார் ஸ்ரீமந்நாராயணன்.

     மூம்மூர்த்திகளுடன், தேவர்களும், ஸப்தரிஷிகளும் கூட்டம் கூட்டமாய்
இவ்விடத்திற்கு (கோஷ்டி கோஷ்டியாய்) வந்தமையால் திருக்கோஷ்டியூர்
ஆயிற்று.

     (திருக்கு + ஓட்டியூர்) திருக்கு என்றால் பாவம். எனவே பாவங்களை
ஓட்டக்கூடிய ஊர் என்றும் பொருள்படும்.

     திருக்கோட்டியூர் அமைந்துள்ள இடத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணம்
பின்வருமாறு கூறுகிறது.

     “காவேரி நதிக்குத் தெற்குப் பக்கத்தில் விருஷபாசலத்திற்கு (அழகர்
கோவிலுக்கு) கீழ்ப்புறத்தில் புண்ணியமாய் சக்தியையுடைய மணிமுத்தா
நதிக்கரையில் பரமாத்ம ஞானம் பிறந்த பாகவதர்கள் தங்குமிடமாய் நான்கு
யோஜனை விஸ்தீரணமாய் (யோஜனை 10 மைல்) கதம்ப மஹரிஷியின்
ஆஸ்ரமம் அமைந்துள்ளது.

     (பிர்ம்மாண்ட புராணம், திருக்கோட்டியூர் க்ஷேத்ர மகிமை சுலோகம் 42,
43)

     பாற்கடலுக்கு எழுந்தருளின பரந்தாமன், தனது அருகாமையில் இருந்த
சங்கு கர்ணனைப் பார்த்து நீ சென்று இரண்யன் மனைவி வசந்தமாலையின்
வயிற்றில் பிரஹலாதனாகப் பிறக்க கடவாய் எனக் கூற, அவ்விதமே
பிரஹலாதன் பிறந்து நாராயண மந்திரத்தைச் சொல்ல, எங்கேயடா உன்
நாராயணன் என்று இரண்யன் கேட்க, தூணிலிருப்பான், துரும்பில் இருப்பான்
என, பிரஹலாதன் சொல்ல, இத்தூணில் உள்ளானோ என்று “பிள்ளையைச்
சீறி வெகுண்டு தூண் புடைப்ப, பிறையெயிற் றண்ணல் விழி