பக்கம் எண் :

563

பேழ்வாய், தெள்ளிய சிங்கமாகிய” தேவாய்த் தோன்றி இரண்யனைக் கொன்று
நரசிம்மவதாரம் முடிவுற்றது.

     இதையெல்லாம் அறிந்த கதம்பரிஷி ஸ்ரீமந் நாராயணன் இரண்யனைப்
பிடித்தது கொன்றது போன்றவற்றைக் குறிக்கும் மங்கள விக்ரகங்களைத்
தனக்குத் தரவேண்டுமென்று பிரம்மனை வேண்ட, பிரம்மன், தேவசிற்பியான
விஸ்வகர்மாவையும், அசுர சிற்பியான மயனையும் அழைத்து தேவலோகத்தில்
உள்ளது போன்ற விமானத்தை இவ்விடத்தில் எழுப்புங்கள் என்று சொல்ல,
மூன்றடுக்குகள் கொண்டதான அஷ்டாங்க விமானத்துடன் அழகிய கோவிலை
நிர்மாணித்து முடித்தனர்.

     மூன்று தளங்களுடன் கூடிய இந்த விமானம் மூன்று பதங்களுடன்
கூடின மூலமந்திரம் போன்ற தாயும் (ஓம் என ஒருபதம், நமோ என ஒருபதம்,
நாராயண என ஒரு பதம்) விளங்குகிறது.

     இரண்யவதம் முடியும் வரை இங்கு தங்கியிருந்த தேவேந்திரனான
இந்திரன் இந்திர லோகத்தில் தன்னால் பூஜிக்கப்பட்ட பேரழகு வாய்ந்த
ஸ்ரீபூமி நீளா தேவிகளுடன் கூடின ஸ்ரீ சௌமிய நாராயணனை, கதம்ப
மஹரிஷிக்கு கொடுக்க மிக்க சந்தோஷத்துடன் பெற்று அர்ச்சித்து வரலானார்.

     கதம்பரிஷியை வாழ்த்தி வணங்கிவிட்டு அனைவரும் தேவருலகெய்தினர்.

மூலவர்

     உரக மெல்லணையான் (திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட ஷீராப்தி
நாதன்) புஜங்க சயனம், கிழக்கே திருமுக மண்டலம் (பன்னக மருதுசாயி
என்றும் பெயர்)

உற்சவர்

     சௌம்ய நாராயணன் நின்ற திருக்கோலம்.

தாயார்

     திருமாமகள் நாச்சியார்.

தீர்த்தம்

     தேவபுஷ்கரணி (திருப்பாற்கடல்)

விமானம்

     அஷ்டாங்க விமானம்

காட்சி கண்டவர்கள்

     பிரம்மா, தேவர்கள், கதம்ப முனி.