பக்கம் எண் :

566

     இதனைச் செவியுற்ற திருக்கோட்டியூர் நம்பி விரைந்து வந்து
இராமானுஜரை நோக்கி “இராமானுஜரே திருமந்திரத்தைப் பிறருக்கு
உரைத்தால் உமக்கு என்ன தண்டனை கிடைக்குமென்பதை மறந்து விட்டீரா”
என்றார்.

     அதற்கு இராமானுஜர் “தெரியும் சுவாமீ, இம்மந்திரத்தைப் பிறருக்குச்
சொன்னால் எனக்கு நரகம் கிட்டுமென்றீர் பரவாயில்லை, அடியேன் ஒருவன்
நரகம் புகுந்தாலும் பரவாயில்லை. இம்மந்திரம் தெரிந்து உச்சரிக்கும்
அனைத்து ஜீவாத்மாக்களுக்கும் மோட்சம் கிட்டுமே என்றார்.

     இதனைக் கேட்டு, ஒரு கணம் சிந்தித்த நம்பிகள் இராமானுஜரை
பகவானின் அவதாரம் என்றே கருதி “நீர் தான் எம்பெருமானாரோ” என்று
கூறி கட்டித் தழுவிக் கொண்டார்.

     அது முதல் இராமானுஜருக்கு “எம்பெருமானார்” என்னும் திருநாமம்
உண்டாயிற்று. இராமானுஜருக்கு, உடையவர், ஸ்ரீபாஷ்யகாரர், திருப்பாவை
ஜீயர் என்னும் திருநாமங்களும் உண்டு.

     எனவே வைஷ்ணவ சம்பிரதாய ஏற்றத்திற்கும் ஒரு மறுமலர்ச்சிக்கும்
பாசறையாக திருக்கோட்டியூர் திகழ்ந்ததென்பதில் ஐயமில்லை.

     8. அஷ்டாங்க விமானத்தின் மூன்றாவது தளத்திலிருந்து கொண்டுதான்
இராமானுஜர் திருமந்திர ரகசிய அர்த்தத்தை வெளியிட்டார். இந்த 3வது
மாடியில் கோபுரத்தின் உச்சியில் ஊரைப் பார்த்தவண்ணம் இராமானுஜருக்கு
சிலை வைக்கப்பட்டு உள்ளது.

     9. திருக்கோட்டியூர் நம்பியின் அவதாரஸ்தலமான இங்கு அவருக்கும்
சிலை வைக்கப்பட்டுள்ளது. திருக்கோட்டியூர் நம்பியின் வம்சா வழியினர்
இன்னமும் இவ்வூரில் வாழ்ந்து வருகின்றனர்.

     10. மற்றவிடத்து இல்லாதவாறு, இங்குள்ள தாயாருக்கு திருமாமகள்,
நிலமாமகள், குலமாமகள் என்ற மூன்று திருநாமங்களுண்டு.

     11. இங்குள்ள திருக்கோட்டியூர் நம்பிகள் சன்னதியில் அவரின்
திருவாராதன மூர்த்தியான ஸ்ரீராமன், சீதை, இலட்சுமணன்,