அனுமான், பவிஷ்யதாச்சாரியர் விக்ரகமும் எழுந்தருளியுள்ளன. 12. திருக்கோட்டியூருக்கு தெற்கில் சுமார் 18 கீ.மி. தொலைவில் அமைந்துள்ள ஒக்கூர் என்னும் ஊரில் வாழ்ந்த சங்ககாலத்துப் பெண்பாற் புலவர் “ஒக்கூர் மாசாத்தியார்” என்பார் இக்கோவிலைப் பற்றிப் பாடிய பாட்டொன்று புறநானூற்றில் காணப்படுகிறது. 13. முகம்மதிய படையெடுப்பின் போது இப்பெருமானை (உற்சவரை) கும்பகோணத்தில் மறைத்து வைத்திருந்தனர், என்றும் அதற்கு காரணமாய் இருந்த அமுதனுக்கு நன்றிப்பாக்கள் பாடப்பட்டன என்றும் கல்வெட்டுக்களால் அறியமுடிகிறது. 14. பத்ரிகாச்ரமத்தைப் போல இத்தலம் பெருமைவாய்ந்ததெனவும், அதனால் இதனை தென்பத்ரியென்றும் கூறுவர் “நைமிசாரண்யத்தில் செய்ததவப்பயனும், கங்கை கரையில் நேர்ந்த மரண பலமும் (ஆயுள் விருத்தி) குருச்சேத்திரத்தில் செய்த தனப்பிரயோஜனமும்” ஆகிய இம்மூன்றும் திருக்கோட்டியூரைச் சேவிப்பதால் கிடைக்குமென்று ப்ரம்மாண்ட புராணத்தில் 47வது ஸ்லோகம் கூறுகிறது. கோஷ்டியூர் போகாதவன் குரங்காய்ப் போவான் என்பதும் வைணவப் பழமொழி. 15. மகாமகக் கிணறு (சிம்மக்கிணறு) இங்கு உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு நீராடுவது மிகவும் விசேஷம். 16. பேயாழ்வார், பூதத்தாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் ஆகிய ஐந்து ஆழ்வார்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்டது. மொத்தம் 40 பாசுரங்கள் மங்களாசாசனம். 17. திருக்கோட்டியூர் வாழ்ந்த செல்வ நம்பிகளைத்தான் பெரியாழ்வார் தம் பாசுரத்தில் அவ்வழக்கொன்று மில்லா அணிகோட்டியர் கோன் அபிமான துங்கன் செல்வன் என்று தனக்கு பரதத்துவ நிர்ணயம் செய்ய உதவி செய்ததைக் குறிக்கிறார். இவ்வூரின் செல்வநம்பிகள் பாண்டிய மன்னன் வல்லபதேவனின் அரண்மனை புரோகிதர் ஆவர். |