18. பராசர பட்டர் என்பவர் கூரத்தாழ்வாருடைய திருக்குமாரர். வீரசுதந்திர சிம்மராயன் என்னும், சிற்றரசன் திருவரங்கன் கோயிலை ஜீர்னோத்தரணம் செய்கையில் “திருவீதி பிள்ளை பட்டர் என்பாரின் திருமாளிகை மதிற்புரத்து மூலையில் இருந்தது. அதை இடித்து அப்புறப்படுத்த சிற்றரசன் முனைந்தபோது மனம் வெதும்பிய பராசர பட்டர் சிற்றரசனை பகைத்துக்கொண்டு திருவரங்கத்தினின்றும் வெளியேறி 1 1/2 ஆண்டுகள் திருக்கோட்டியூரில் தங்கி இருந்தார். இவர் கோஷ்டிஸ்தவம் என்னும் நூல் எழுதியுள்ளார். 19. இராமானுஜரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. 20. செல்வ நம்பிகள் பெரியாழ்வாரைத் திருக்கோட்டியூருக்கு அழைத்து வந்தபொழுது ஸ்ரீஜெயந்தி உற்சவம் நடைபெற்றது. பக்திப் பரவசத்துடன் மிகவும் நேர்த்தியான ஆடல்பாடலால் உற்சவம் நடந்ததைக் கண்டு இதுதான் ஆயர்பாடி என்றும், வண்ண மாடங்கள் சூழ்.... திருக்கோட்டியூர் என்று மங்களாசாசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து தாலாட்டு, நீராட்டல், பூச்சூடல் போன்றனவும் இவருக்கே பாடினதாயும் கொள்வர். 21. உரக மெல்லணையான் என்று பெரியாழ்வார் மூலவரையும் திருமாமகட் கினியான் என்று உற்சவரையும் மங்களாசாசனம் செய்கிறார். திருமங்கையாழ்வார், திருப்பிரிதி என்ற திவ்ய தேசத்தில் தொடங்கிய பதிகம் மூலமான அர்ச்சாவதார மங்களாசாசனத்தை, திருக்கோட்டியூரில் நிறைவு செய்கிறார், 22. செந்நெற்குடி புலவர் சுப்புராயலு என்பர் சௌமிய நாராயண மூர்த்திப் பிள்ளைத் தமிழ் என்னும் நூலை இப்பெருமானுக்கு யாத்துள்ளார். 23. சிவகங்கை சமஸ்தானத்து வாரிசினர் தொன்று தொட்டு இத்தலத்திற்குப் பெருந்தொண்டு புரிந்து வருகின்றனர். |