பக்கம் எண் :

573

     இந்தக் கடற்கரையில் இராம தூதனான அநுமான் தென்றிசை நோக்கி
கூப்பிய கரங்களுடன் இராம தியானத்தில் ஆழ்ந்துள்ள காட்சி மிகவும் எழில்
வாய்ந்ததாகும். இந்த ஆஞ்சநேயரும் மிகப் பெரும் வரப்பிரசாதியாக மக்களின்
துன்பங்களைப் போக்கி அருள் பாலிக்கிறார்.

     8. இராமாயணத்தோடும், இராமாயணம் பேசுவோருடனும் நீங்காத்
தொடர்பு கொண்டது இத்தலம்.

     9. திருமங்கையாழ்வாரால் மட்டும் 21 பாசுரங்களில் மங்களாசாசனம்
செய்யப்பட்ட தலம், புன்னை முத்தம் சூழ்ந்த அழகாய புல்லாணியே என்றும்,
போது அலரும் புன்னை சூழ் புல்லாணியென்றும், பூஞ்செருத்தி பொன்
சொரியும் புல்லாணியென்றும் பவ்வத்திரை உலவு புல்லாணி என்றும்
இத்தலத்தைச் சுற்றியுள்ள இயற்கை யெழிலில் மாந்தி மயங்குகிறார்.
திருமங்கையாழ்வார்.

     10. இத்தலத்தில் கிருஷ்ண பரமாத்மா தொட்டில் கண்ணணாக
அவதரித்துள்ளார். தசரதர் புத்திரப் பேற்றை வேண்டி இங்கு வந்து புத்திர
காமேஷ்டி யாகம் செய்தாரென்பர். அவர்கள் இங்கு செய்த யாகத்தின்
பயனாகவே நான்கு வேதங்களும் இராமன் முதலான 4 புத்திரர்களாக
அவதரித்தனர் என்பது வரலாறு. எனவே இன்றளவும் இத்தலம் புத்திரப்
பேற்றை நல்கும் புனித தலமாகக் கொள்ளப்படுகிறது.

     11. மணவாள மாமுனிகள் இங்கு எழுந்தருளியது மட்டுமன்றி
இப்பெருமான் மீது அவர் கொண்ட ஈடுபாடும் பெருமைக்குரியதாகும்.

     12. ஆழ்வார், ஆச்சார்யர்கள் பாசுரம் தவிர்த்து புல்லை, அந்தாதி,
திருப்புல்லாணி மாலை, தெய்வச்சிலையான் ஸ்துதி, வாசனமாலை, புல்லாணிப்
பெருமாள், நலுங்கு போன்ற நூல்களும் இத்தலத்தைப் பற்றி செய்திகள்
தருகின்றன.

     13. இத்தலத்தின் சிறப்பைப் பற்றி சங்க நூலான அகநானூற்றின் 70வது
பாடல் பின்வருமாறு கூறுகிறது.
 

     “வெள்வேர் கவுரியிர் தொன் முதுகோடி          முழங்கிடும் பௌவம் இரங்கும் முன்றுறை