கடலைத்திருத்தி அணைகட்டி விளையாடினாய். உன் பொற்பாதங்களின் மேன்மையை உலகோருணர முடியாது. ஓ, மாகடல் வண்ணனே நீ உன் தேவிமார்களுடன் வந்து நாங்கள் கட்டிக்கொண்டிருக்கும் இந்த மணல் வீடுகளை மிதித்து ஆடி சிதைக்கமாட்டாயா என்று கேட்கிறார் ஆண்டாள் இதோ அப்பாடல். “ஓத மாகடல் வண்ணா உன் மண வாட்டி மாரோடு சூழறும் சேதுபந்தம் திருத்தினா யெங்கள் சிற்றில் வந்து சிதையேலே - 520 | திருமழிசையாழ்வார் சேதுவின் வரலாற்றையே தெளிவாகப் பேசிப் போகிறார். இராமன் வாலியைக் கொன்றதனால் இராமனுக்கு உதவ வந்த வானர சேனையினால் கட்டப்பட்டது, இந்த சேது. எனவே வாலியை வீழ்த்துவதற்கு இதுவே முன்னோடியாயிற்று. இலங்கையை அழிப்பதற்காக கட்டப் பட்ட சேது. இராவணனை ஒடுக்குவதற்காக இராமன் உகப்போடு வீறு நடைபோட ஏதுவாய் அமைந்தது இந்த சேது, என்று திருமழிசையாழ்வார் இந்த சேதுவை மங்களாசாசனம் செய்கிறார். “இது இலங்கை யீடழியக் கட்டிய சேது இது விலங்கு வாலியை வீழ்த்தது - இது விலங்கை தானொடுங்க வில்னுடங்கத் தண்தா ரிராவணனை ஊனொடுங்க எய்தான் உகப்பு” - நான்முகன் திருவந்தாதி 28 | இவ்விருவரின் மங்களாசாசனங்களைப் பார்த்தார் குலசேகராழ்வார். ஆகா, சேதுக்கரைக்கு இப்படியொரு மங்களாசாசனம் நல்கியுள்ளனரே நாமும் இதனை மங்களாசாசனம் செய்ய வேண்டாமோ என்று சிந்தை கொண்டார். இவர்கள் விட்டுவிட்ட ஒன்றைச் சேர்த்து (அதாவது சேது அணையை கட்டுவதற்கு அணில்கள் செய்த பேருதவியை நினைத்து) குரங்குகள் மலைகளைத் தூக்கிக் கொண்டு அத்துடன் கடலில் குதித்து தம்மைக் குளிப்பாட்டிக்கொண்டு ஓடியும் ஆடியும் புரண்டும் ஒரு பாதையை அமைத்தன. குரங்குகளால் போடப்பட்ட மலைக்கற்கள் மற்றும் பாறைகளில் இடையிலிருந்த |