பக்கம் எண் :

577

விபீடணன் சரணாகதிக்கு வந்துள்ளதை இராமபிரானுக்கு தெரிவித்து அவனுக்கு
அடைக்கலம் கொடுத்தருள வேண்டுமென்ற பாவனையில் சிரந்தாழ்த்தி, வாய்
புதைத்து நிற்கும் அனுமனின் தோற்றம் மனமுருக வைக்கிறது. இது போன்ற
ஆஞ்சநேயரை மற்ற திவ்யதேசத்தில் காண்பதரிது.

     17. மூலவரின் திருநாமத்தை,
 

     பவ்வத் திரையுலவு புல்லாணி கைதொழுதேன்
     தெய்வச் சிலையாற் கென் சிந்தை
                   நோய் செப்புமினே - 1780

     என்று திருமங்கையாழ்வார் எம்பெருமானின் பெயரை இதில்
குறிப்பிடுகிறார்.