தோன்றினார். உடனே ஆதிசேடன் தனது உடலால் ஆசனமும் செய்து, 5 தலைகளால் பாத்தியம், அர்க்கியம், ஆசமனீயம் முதலியன கொடுத்து தன் சிரங்களாகிய புஷ்பங்களால் பூஜித்து, வாசம் மிகுந்த வாய்க்காற்றினால் தூபம் கொடுத்து, தன் சிரத்தில் உள்ள ரத்தினங்களால் தீபாராதனை செய்து நாக்குகளால் ஆலவட்டம் வீசி, படங்களால் குடைபிடித்து மானசீகமாக அன்ன நிவேதனம் செய்து ஆராதித்தான். இதனால் மிக மகிழ்ந்த மகாவிஷ்ணு ஆதிசேடனுக்கு ஸத்வகுணத்தை அளித்து, அவனது கோர குணத்தை மாற்றியது மட்டுமன்றி இன்னும் வேறு என்ன வரம் வேண்டுமென்று கேட்டார். அதற்கு ஆதிசேடன் திருப்பாற்கடலில் என் மீது சயனித்துள்ளவாறு இங்கும் சயனித்துக் காட்சியருள வேண்டுமென்று கேட்க, அவ்வண்ணமே ஆகட்டும் என்றார். பின்னர் அர்ச்சாரூபமாய் மாறிய பின்னர் இருவரும் திருப்பாற்கடலெய்தினர். சந்திரன் தவம் அத்திரி என்ற முனிவரின் கற்புடை மனைவி அனுசூயை என்பவள் மும்மூர்த்திகளே தமக்குப் புத்திரர்களாக வாய்க்க வேண்டுமென கடுந்தவமியற்றினாள். அதன் பயனாக மஹாவிஷ்ணு அம்சமாக தத்தாத்திரேயர் என்ற தவநிதியாகவும், கோபாம்சக் குணம் கொண்ட ருத்ரன் அம்சமாக துர்வாசர் என்ற கோபம் மிகுந்த முனிவராயும், பிரம்மாவின் அம்சமாக சந்திரனும் வந்து பிறந்தனர். தக்க பருவம் அடைந்ததும் அத்திரி முனிவர் மூவரையும் அழைத்து மந்திர உபதேசம் செய்து தவஞ்செய்ய அனுப்பினார். துர்வாசர் கைலாய மலையினையும், தத்தாத்திரேயர் இமயமலையினையும், சந்திரன் ஸத்திய கிரியையும் அடைந்தனர். பிரம்மனுக்கு திருமாலைக் குறித்து தவம் செய்வதே எப்போதும் பொழுது போக்கான விஷயம். எனவே பிரம்மனின் அம்சமாக வந்த சந்திரன் இச்சத்திய கிரியை அடைந்து திருமாலைக் குறித்துக் கடுந்தவம் செய்யலானான். திருமால் வாமன வடிவில் சந்திரனுக்கு காட்சி தந்து என்ன வரம் வேண்டுமென்று வினவினார். இத்தலத்தில் எனக்கு காட்சி கொடுத்த மாதிரியே சந்திர மண்டலத்திலும் தாங்கள் எழுந்தருளி நித்திய வாசம் செய்யவேண்டுமென சந்திரன் வேண்டவே ராஜ ஹம்ஸம் வெண் தாமரையில் வசிப்பதுபோல் திருமால் அங்கு எழுந்தருளி நித்திய வாசம் செய்யலானார். ஸத்திய மகரிஷியின் வரலாறு இமயத்தின் வடபுரத் தாழ்வரையில் புஷ்ப பத்திரை என்னும் நதியோடுகிறது. அதன் கரையில் சித்ரசிலை என்ற பாறை இருக்கிறது அந்தப் பாறையினருகில் பத்ரவடம் என்ற ஒரு ஆலமரம் |