பக்கம் எண் :

580

இருந்தது. அதனடியில் ஸத்திய தவர் என்னும் முனிவர் தவமியற்றினார். இவர்
மகா தபசி. இவரது தவத்தை மெச்சி காட்சி கொடுத்த எம்பெருமான் என்ன
வரம் வேண்டுமென்று கேட்க அதற்கு ஸத்தியத்தவர் எனக்கு வரம் எதுவும்
வேண்டாம். ஆயின் நான் நினைக்கும் போதெல்லாம் தாங்கள் எழுந்தருள
வேண்டும் என்றார். மகாவிஷ்ணுவும் சரி என்று ஒப்புக்கொண்டார். பின்னர்
அம்முனிவரைப் பார்த்து இவ்விடத்தில் (இமயச்சாரலில்) பின்னொரு யுகத்தில்
யாம் இன்னொரு திருவிளையாடல் புரிய சித்தமாயுள்ளோம். ஆகவே நீங்கள்
தவம் செய்ததற்கு பிறிதொரு இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளும். உம்
விருப்பப்படி நீங்கள் நினைத்த மாத்திரத்தில் வரக்கடவோம் என்றார்
மஹாவிஷ்ணு.

     இதைச் செவிமடுத்து மிகவும் சந்தோஷித்த ஸத்தியதவர் திருமாலை
நோக்கி அவ்வாறாயின் யான் தவம் செய்தற்குத் தகுந்த இடத்தை தாங்களே
திருவாய்மலர்ந்தருளும்படி வேண்டினார். உடனே மஹாவிஷ்ணு சந்திரனும்,
அனந்தனும் தன்னைக் குறித்து தவமிருந்த இந்தச் சேத்திரத்தில் (சத்திய
ஷேத்திரத்தில்) சென்று தவமியற்ற அருளினார்.

     தமக்கு கிடைத்த பெரும் பேற்றை எண்ணிய ஸத்தியதவர் மீண்டும்
மஹாவிஷ்ணுவை நோக்கி அவ்வாறாயின் இவ்வளவு காலம் என்னோடு
ஒன்றிப் போய்விட்ட புஷ்ப பத்திரா என்னும் நதி, சித்திரசிலை என்னும்
பாறை, பத்ரவடம் என்னும் ஆலமரம், என்னும் இம்மூன்றும் எனக்குத் தாய்,
தந்தை, தோழன், போன்றன. எனவே இவைகளை விட்டுப் பிரிவதும் மிகவும்
கஷ்டமாயுள்ளது. என்றார். உடனே மஹாவிஷ்ணு அவரின் நன்றியறிதலை
மெச்சி அவ்வாறாயின் இந்த மூன்றையும் அந்தச் சேத்திரத்திற்கே அனுப்பி
வைக்கிறேன் என்று சொல்லி ஐராவதத்திற்கு உத்தரவிட அம்மூன்றும் இங்கு
வந்து சேர்ந்தன. புஷ்பத்திரா நதி புஷ்கரணியாயிற்று. சித்திர சிலை என்னும்
பாறையே தற்போதுள்ள மெய்ய மலையாயிற்று. பத்ரவடம் என்னும்
ஆலமரமே தற்போது அரசமரமாகக் காட்சியளிக்கிறது. இந்த ஆலமரம்,
 

     கிரேதாயுகத்தில் பத்ரவடமாகவும்
     திரேதாயுகத்தில் அஸ்வத்தமாகவும்
     துவாபரயுகத்தில் புத்திரதீபமாகவும்
     கலியுகத்தில் பநஸ என்ற பெயரில்
     அரச மரமாகவும் திகழ்கிறது.

     ஸத்திய முனிவரும் இங்கு வந்து கடுந்தவஞ் செய்ய, ஓர் நாள் வைகாசி
சுக்ல பட்சம், பஞ்சமி ஞாயிறன்று சிம்ம