பக்கம் எண் :

581

லக்கினத்தில் எம்பெருமானை நினைக்க உடனே பிரத்யட்சமாகி யாது
வேண்டுமென்று கேட்க ஸத்திய முனிவர் மோட்சம் வேண்டுமென்றார். அதற்கு
திருமால் ஸத்திய முனிவரை நோக்கி இன்னும் கொஞ்சகாலம் இங்கேயே தவம்
புரிந்து கொண்டிருக்குமாறும் புருரவச் சக்கரவர்த்தி இவ்விடம் வந்து
சேர்ந்தவுடன் இருவருக்கும் மோட்சம் அளிப்பதாகவும் கூறியருளினார்.

     நவக்கிரகங்களில் ஒருவனான புதனின் மைந்தன் புருரவச் சக்கரவர்த்தி,
இக்காலத்தில் இவன் மதுரையை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி
செய்துவந்தான். இவன் விஷ்ணு பக்தியில் அளவற்ற ஈடுபாடும் பேராற்றலும்
பெற்றவன். இவனுக்கு அருள்பாலிக்கும் பொருட்டு அடிக்கடி பிராட்டியால்
வேண்டப்பட்ட எம்பெருமான் தன் பரிவாரங்களையெல்லாம் வராகங்களாக்கி
தானும் வராக ரூபங்கொண்டு மதுரைக்கு எழுந்தருளினார்.

     வைகைக்கு வடக்கு பக்கமாகவும், வெள்ளாற்றுக்கு தெற்கு பக்கமாகவும்
உள்ள செழிப்பான பகுதியில் இந்த வராகங்கள் புகுந்து வயல்களை நாசம்
செய்ய கிராம மக்களால் இவைகளை அடக்க முடியாமல் போக மதுரைக்கு
மன்னனான புருரவச் சக்கரவர்த்தியிடம் முறையிட்டனர் (பிர்ம்மாண்ட
புராணம் ஸ்லோகம் 217)

     மன்னன் தன் சேனைகளை அனுப்ப அவர்கள் தோற்றுப் போய்வர,
இதைக்கண்டு திகைத்த மன்னன் தானே நேரில் யுத்தத்திற்கு சென்று வராகக்
கூட்டங்களின் மீது சரமாரியாக அம்புகளை எய்து கொண்டிருக்கையில்
தலைமை வராகம் மட்டும் (விஷ்ணு) புருரவச் சக்கரவர்த்தியின் முன்பு வந்து
அவன் கைகளில் வைத்திருந்த வில்லையும் அம்பையும் பறித்துக் கொண்டு
ஓட இவன் துரத்த இறுதியில் இந்த சத்தியகிரிவரை ஓடிவந்த அந்த வராகம்
ஆலமரத்தடியில் தவம் செய்து கொண்டிருந்த ஸத்திய முனிவருக்கு முன்னால்
ஒரு மனிதன் பேசுவது போல் இதோ புருரவன் வந்துவிட்டான், புருரவன்
வந்துவிட்டான் என்று இரண்டு முறை சப்தமிட்டுவிட்டு மறைந்துவிட்டது.

     சப்தத்தைக் கேட்டு தவத்திலிருந்து கண்விழித்த ஸத்திய முனிவரும்
புருரவச் சக்கரவர்த்தியும் யாரையும் காணாது திகைத்து நிற்க
அவ்விருவருக்கும் சக்ரதாரியாக காட்சி தந்து சத்திய முனிவருக்கு மோட்சம்
கொடுத்துவிட்டு, புருரவனை நோக்கி நீ இன்னும் 3 ஆண்டுகள் இங்கு
தங்கியிருந்து இந்த ஆலயத்தை