பக்கம் எண் :

582

நல்லவிதத்தில் கட்டி முடித்து அதன்பின்பு என்னைச் சேர்வாயாக என்று
அருளி மறைந்தார்.

மூலவர்

     ஸத்யகிரி நாதன், ஸத்யமூர்த்தி கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்,
அனந்த சயனத்தில் பள்ளிகொண்ட பெருமாள்.

உற்சவர்

     மெய்யப்பன். ராஜ கோபாலன் என்ற திருநாமமும் உண்டு.

தாயார்

     உஜ்ஜீவனத் தாயார், உய்யவந்த நாச்சியார், என்பதும் திருநாமம்.

தீர்த்தம்

     கதம்ப புஷ்கரணி, ஸத்ய தீர்த்தம்

ஸ்தலவிருட்சம்

     அரச மரம் (அஸ்வத்தம்)

விமானம்

     ஸத்திய கிரி விமானம்

காட்சி கண்டவர்கள்

     ஸத்திய முனி, புருரவன் ஆதிசேடன், சந்திரன், கருடன்.

சிறப்புக்கள்

     1. கருடன் தன் தாயின் அடிமைத் தளையைத் தீர்க்க அமிர்தம்
கொண்டுவர வேண்டிய நிலையேற்பட்டது. அதற்கு வேண்டிய மகாபலத்தையும்
சக்தியையும் இவ்விடத்திலிருந்துதான் மஹாவிஷ்ணுவைக் குறித்துத் தவமிருந்து
பெற்றான் என்பர்.

     2. சுவேதத் தீவில் பகவானுடைய கோட்டை வாசற் காவல் பூண்ட
தச்சகன் என்பவன் கோபங்கொண்ட துர்வாச முனிவரால் சபிக்கப்பட்டு
உடனே பாம்பினுருவத்தையடைந்து பூமியில் பல இடங்களிலும் திரிந்து
இறுதியில் இத்தலத்தை அடைந்த மாத்திரத்தில் பகவானின் அனுக்கிரகத்தால்
முன்பு போலவே விஷ்ணு சிங்கார ரூபத்தையடைந்தான்.

     3. இங்கு சந்திரனால் ஆராதிக்கப்பட்ட பிம்பம் ஸத்திய புஷ்கரணிக்கு
தெற்கில் ததிவாமன மூர்த்தியாய் உள்ளது.