பக்கம் எண் :

584

வடநாட்டுத் திருப்பதிகள் ஒரு விளக்கம்

     செந்தமிழ் நாட்டுப் பதிகள் போல் சூட்டுயர் மாடங்களும்,
நெடிந்துயர்ந்த கோபுரங்களும், மாபெரும் சுற்று மதில்களும், பெரியனவாய
தடாகங்களும், குளிர் தரும் மரங்களிடைப்பட்டு அடர்ந்த சோலைகட்குள்
அடங்கிய தோற்றத்தனவாய் வடநாட்டுத் திருப்பதிகள் இல்லை.

     தொன்று தொட்டு இன்று வரை இந்தியாவின் வரலாறு எழுதப்பட்டுக்
கொண்டே இருக்கும் வட இந்தியாவில் காலச் சூழ்நிலையாலும், அன்னியர்
வருகையாலும், அடிக்கடி நிகழ்ந்த யுத்தங்களாலும், திருத்தலங்கள்
பாதிப்படைந்துள்ளன. கூம்பு வடிவமைந்த கோபுரங்களும், சிறிய அளவிலான
மூலஸ்தானங்களும் தமிழ்நாட்டில் நாம் கண்டு களிக்கும் அர்ச்சாவதார
மூர்த்திகளின்றும் வித்தியாசமான வடிவில் அமைந்த மூர்த்திகளோடு
இத்தலங்கள் திகழ்கின்றன.

     ஆதனூரில் பள்ளி கொண்ட ஆண்டளக்கும் ஐயன் போன்ற ஒரு
அழகுத் திருமேனியையும், காஞ்சிபுரத்தில் உலகளந்த பெருமாளாக ஊரகத்தே
நின்று நீண்டவத்தக் கருமுகிலை என்னுமாப்போலே நெடிந்துயர்ந்த
நிலையிலான நின்ற திருக்கோலத்திருமேனியையும், மதுரைக் கூடலில் கூடல்
அழகராக வீற்றிருக்கும் திருமேனிக்கீடான மூர்த்திகளை வடநாட்டில்
காண்டலரிது. என்னதான் இருந்தாலும் தமிழ் எனில் அதன் மாண்பும்,
மகத்துவமும் தனியானதுதானே. தமிழகந்தான் எத்துனை புண்ணியம்
செய்துள்ளது. அடேயப்பா எத்தனை திவ்யதேசங்கள். எவ்வளவு பாசுரங்கள்.
எத்தனை ஆச்சார்யார்கள். செந்தமிழ்நாடென்னும் போதினிலே இன்பத் தேன்
வந்து பாயுதெம் காதினிலே என்ற பாரதியின் பாடல்தான் எவ்வளவு உண்மை.

     தமிழ்நாட்டு எம்பெருமான்கள் இத்தகைத்தோர் என்றால் யாம்
மட்டுமென்ன குறைந்தவர்களோ என்று இந்த வடநாட்டுப் பெருமாள்கள்
வேதங்களுக்கும், வேத வாக்கியங்களுக்கும், புராண இதிகாசங்களுக்கும்
மத்தியில் புகழில் மண்டிக் கிடக்கின்றார்கள். இம்மட்டோ உலகெங்கும் பரவி
நிற்கும் தாரக மந்திரமான ராமகிருஷ்ண அவதாரங்களின் மகிமையொன்றே
போதும், வடநாட்டுத் தலங்களின் மாண்பினைச் செப்பிட, இத்தோடு நில்லாமல்
புண்ணியங்கள் நிறைந்த புகழ் மலிந்த கங்கை, யமுனை, சரஸ்வதி,
பிரம்மபுத்திரா, அளகநந்தா ப்ராயாகை, சரயு என்னும்