நதிகளுடன் இயைந்து செல்லும் வரலாறு படைத்தவை இத்தலங்கள். தென்னாட்டு ஸ்தலங்களைப் போன்று எளிதில் வரலாறு எழுதிவிட முடியாதவைகள் இத்தலங்கள். யுகானு யுகாந்த்ரங்களோடு தொன்று நிகழ்ந்தனைத்தும் உணர்த்திடும் சூழ்கலைவாணர்களும் என்று உதித்தவை இவை என்று உணரமுடியா தொன்மை படைத்தவைகள் இத்தலங்கள். திருப்பிரிதி எங்கிருக்கிறதென்று சொல்லிவிடவே முடியாது. அவ்விதமே திருப்பாற்கடல் பற்றியும், சாளக்கிராமம் பற்றியும், துவாரகா பற்றியும் இவைகள் எங்கிருந்தன என்னும் கருத்து வேறுபாடுகள் இன்றும் உண்டு. ஆழ்வார்களால் பாசுரஞ் சூட்டப்பட்ட மூர்த்திகள் சில ஸ்தலங்களில் இல்லை. ஆயின் ஆழ்வார்கள் இங்கு பிராந்தியம் பிராந்தியமாக மங்களாசாசனம் செய்துள்ளனர். அதாவது கோகுலம் என்று கோகுலம் பகுதி முழுவதும், பிருந்தாவனம் என்று பிருந்தாவனம் முழுமையும், அயோத்தி என்ற சொல்லால் அயோத்தி மாநகர் மட்டுமன்றி ராமாயண சரித நிகழ்ச்சிகள் நடந்த இடம் முழுவதையும் என்று மங்களாசாசனம் பரவிக் கிடக்கின்ற ஸ்தலங்களாகும் இவைகள். பனி மூடிய சிகரங்களுக்கிடையே பளிச்சென மின்னும் திவ்ய தேசமும் உண்டு. வேத, இதிகாச, புராண ஸ்மிருதிகளோடு, தர்மம், ஞானம், யாகம் என்ற கோட்பாடுகள் சூழ திகழும் திவ்யதேசங்களாகும். இந்தியாவின் தொல் புகழை, ஆன்மீக முதிர்ச்சியை மெல்லிய ரீங்காரத்தில் உலகம் தோன்றிய போதுண்டான ஓம் என்னும் சப்தத்தோடு தோன்றி புகழ்பாடிக் கொண்டிருப்பவை. அ உ ம என்ற மூன்றெழுத்துக்களின் சேர்க்கையோடு ஓங்கார வடிவத்தில் திகழ்பவைகள். இத்தலங்கள், நதிகளோடும், அவதாரங்களோடும் பின்னிப் பிணைந்து கிடப்பவை. அ என்ற எழுத்தாகவும், பிரத்யுமனனாகவும் இருக்கிறாள். சரஸ்வதி, உ என்ற எழுத்தாகவும், அநிருத்தனாகவும் இருக்கிறாள் யமுனை. ம என்ற எழுத்தாகவும் சங்கர்சணனாகவும் இருக்கிறாள் கங்கை. (அதாவது நார என்ற சொல்லால் ஸ்ரீமந் நாராயணன் ஜல சொரூபமாக (தீர்த்தமுமாகி) திகழ்கிறார் எம்பெருமான், ஸர்வம் விஷ்ணு மயம் என்பது போல பிரத்யுமனனாக இருக்கும் அவனே சரஸ்வதி நதியாகி தீர்த்த சொரூபமாகிறான். அநிருத்தனாக யமுனை சொரூபமாகி சங்கர்ஷணனாக கங்கை சொரூபமாகிறான், (தீ, நீர், எரி, கால், விசும்புமாகி என்றாரேயாழ்வார்) என்று வேதம் பகர்ந்து பரமபதத்திலிருந்து எம்பெருமான் தன்னை வ்யூக நிலைக்கு எழுந்தருளப் பண்ணியதை தன்னோடு |