பக்கம் எண் :

586

சங்கமித்துக் கொண்ட நதிகளின் அரவணைப்பில் கிடப்பவை இத்தலங்கள்.

     அர்ச்சாவதாரங்களில் லயித்து தம்மைப் பிரிக்க வொண்ணாது
ஆழ்வார்கள் பிணைத்துக் கொண்டதைப் போல எம்பெருமானின் அவதார
ரகஸ்யங்களோடு அவனது மூல சொரூபத்திலே பிணைத்துக் கொண்டு
கிடக்கும் வேதங்களால் வெளிக் கொணரப்பட்ட எம்பெருமான்கள்
மூழ்கிக்கிடக்கும் திவ்ய தேசங்கள் இவை.

     வேதம் விரித்துரைத்த இப்பெருமான்களுக்கு வகுளம் பூண்ட மார்பில்
துளவமும் சேர்ந்ததைப் போல மணம் பெற்றுத் திகழும் பெருமை மிக்க
ஸ்தலங்களாகும். இவை.

     வடநாட்டு தலங்கள் பதினொன்றென்றும், பன்னிரெண்டென்றும் கருத்து
வேறுபாடுகள் உண்டு. இருப்பினும் அவ்வடநாடாறிரண்டு என்னும்
சொல்லிற்கேற்ப வடநாட்டுத் திருப்பதிகள் 12 எனவே கொள்ளலாம்.

     அப்பன்னிரு ஸ்தலங்கள் யாவையென கீழ்க்காணும் பாடலால் உணரலாம்.
 

     திகழ்திரு வேங்கடஞ் சிங்கவேள் குன்றம்
          நகரமா மயோத்தி நைமிசா ரண்யம்
     தன்னிக ரில்லாச் சாளக்கி ராமம்
          மன்னிய புகழுடை வதரியாச் சிரமம்
     காவற் கங்கைக் கரைகண்டம் பிரிதி
          தூவட மதுரை துவாரை யாய்ப்பாடி
     படர்பாற் காடலிப் பன்னிரண் டுமே
     அவ்வட நாட்டுப் பதியென வணங்கிப் போற்றுவம்.

     இனி இத்திருத்தல வரலாறுகளைத் தெள்ளிதின் உணரச் செல்வோம்.