பக்கம் எண் :

588

     பிரம்மாவின் முதல் புத்திரனான ஸ்வாயம்புவான் என்பவனுக்கு
ஸ்ரீநாராயணனே வைகுந்தத்தின் மத்தியிலிருந்து அயோத்தியென்னும்
பாகத்தை பிரம்மா மூலம் கொடுக்க, அதை அவர் மனுச் சக்கரவர்த்திக்கு
அளிக்க, அவர் பூலோகத்தில் சரயு நதியின் தென்கரையில் ஸ்தாபித்தார்
என்பதே பிரதானமான ஸ்தல வரலாறு. இதுவே பல நூல்களிலும்
எடுத்தாளப்பட்டுள்ளது. இதனால்தான் அம்புயத்தோன் அயோத்தி
மன்னனுக்கே அளித்த கோயில் என்னும் வழக்கு உண்டாயிற்று. தான்
பின்னொரு காலத்தில் அவதாரம் எடுப்பதற்காகவே ஸ்ரீமந் நாராயணன்
வைகுந்தத்தை முதலிலேயே இங்கு இறக்கிவைத்துவிட்டாரோ என்னவோ.

     இத்தகைய அயோத்தியின் இன்றைய நிலைமை எல்லோருக்கும் தெரிந்த
ஒன்றாகும். இன்றைய அயோத்தியே பாரத மண்ணில் பக்தி மணத்தைக் கமழச்
செய்து கொண்டிருக்கிறதென்றால் திரேதாயுகத்தின் அயோத்தி எப்படி
இருந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. உண்மையிலேயே
வைகுந்தமாகவே இருந்திருக்கும்.

மூலவர்

     ஸ்ரீராமன், சக்கரவர்த்தி திருமகன், ரகுநாயகன், வடதிசை நோக்கி
அமர்ந்த திருக்கோலம்.

தாயார்

     சீத்தா பிராட்டி

தீர்த்தம்

     சரயூ நதி, பரமபத புஷ்கரணி

விமானம்

     புஷ்கல விமானம்

காட்சி கண்டவர்கள்

     பரதாழ்வான், தேவர்கள், முனிவர்கள், திரேதாயுகத்து அயோத்தி
நகர்வாசிகள்.

சிறப்புக்கள்

     1. முக்தி தரும் 7 ஸ்தலங்களுள் ஒன்றான இந்த அயோத்தியில்
திரேதாயுகத்தில் உதித்த ராமநாமம் இந்தியா முழுவதும், ஏன் உலகம்
முழுவதும், எந்நேரமும் இடைவிடாது ஒலித்துக் கொண்டிருக்கிறது.
வானொலியிலும், தொலைக்காட்சியிலும், சங்கீதங்களிலும், மனிதர்களின்
பெயர்களிலும், புராண இதிகாச இலக்கியங்கள் மூலமாகவும்,