16. இத்தகுசிறப்புப் பெற்ற ராமகாதை நிகழ்ந்த அயோத்தியை வாழ்வில் ஒரு முறையாவது சென்று கண்டு வருதல் ஒவ்வொரு இந்துவின் கடமையாகும். வைணவ பக்தர்கள் குலசேகராழ்வார் அருளிய 10 பாக்களை மனனம் செய்து இங்கு சில நாட்கள் தங்கி ராமசரிதம் சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களையும் சேவித்து, ராம நாமத்தில் திளைத்து மீள்தல் ராமர் காலத்திலேயே வாழ்ந்த பேரின்ப அனுபவத்தைக் கொடுக்குமென்பதில் ஐயமில்லை. |