பக்கம் எண் :

598

தீர்த்தம்

     சக்கர தீர்த்தம் - கோமுகி நதி

விமானம்

     ஸ்ரீஹரி விமானம்

ஸ்தல விருட்சம்

     தபோவனம்

காட்சி கண்டவர்கள்

     இந்திரன், சுதர்மன், சூதபுரானிகர், ரோமசர் முதலான முனிவர்கள்

சிறப்புக்கள்

     1. இயற்கை வழிபாடு முறைப்படி எம்பெருமானை ஆரண்ய ரூபியாக
எண்ணி வழிபடும் முறை 108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டும் தான் உண்டு.

     2. இங்குள்ள சக்ர தீர்த்தம் சகல பாவங்களையும் போக்க வல்லது.
எம்பெருமானுக்கும் சக்ரநாராயணன் என்றொரு திருநாமம் உண்டு. இந்த சக்ர
நதிக்கரையில் சக்கரத்தாழ்வார் ராம, லட்சுமண, சீதை முதலியோருக்கும்
சன்னதிகள் உண்டு. வினோதமான முறையில் இங்கு விநாயகருக்கும் சன்னதி
உண்டு. இதுவும் வேறெந்த திவ்ய தேசத்திலும் இல்லாதது.

     3. இங்கிருந்து கோமுகி நதிக்குப் போகும் வழியில் வியாஸ கட்டி என்ற
இடத்தில் வேதவியாசருக்கும் ஆலயம் உள்ளது. வியாச முனிவரும்,
சுகப்பிரும்ம முனிவரும் இங்கிருந்து கொண்டுதான் பாரதம், பாகவதம்
போன்றவற்றை உருவாக்கினார்கள். இதனால் வேறெந்த ஸ்தலத்திற்கும்
இல்லாத பெருமை (வேத நூல்களை உருவாக்கிய முனிவர்கள் வாஸம் செய்தது)
இத்தலத்திற்குண்டாகிறது.

     4. இதே ஊரில் மற்றொரு புறத்தில் உள்ள குன்றின் மீது அமைந்துள்ள
ஹனுமான் கட்டி என்றழைக்கப்படும் ஆலயத்தில் உள்ள பிரும்மாண்ட
அனுமார், இராம, லட்சுமணர்களைத் தமது தோளில் தாங்கி எழுந்தருளியுள்ள
காட்சி மிகவும் ரம்மியமானதாகும்.

     5. திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாசுரங்களால் இத்தலம்
மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. இந்த பத்துப் பாசுரங்களில்
திருமங்கையாழ்வார் தம்முடைய தாழ்வுகளையெல்லாம் கூறிக்கொண்டு
பிராட்டியை முன்னிட்டுக் கொண்டு பகவானைச் சரணமடைகிறார்.