சிறப்புக்கள் 1. திருமங்கையாழ்வார் முதன்முதலில் மங்களாசாசனம் செய்த தலம். இங்கிருந்துதான் இவர் தனது மங்களாசாசனத்தைத் தொடங்கினார். இங்கிருந்து தெற்கு நோக்கி வரும்போது வடநாட்டிலிருந்து தென்திசை வரும் வழியில் உள்ள ஸ்தலங்களில் சிலவற்றை மங்களாசாசனம் செய்து கொண்டே வந்து தென்னாடு புகருகிறார். திருமங்கையாழ்வார் இத்தலத்திற்கு 10 பாசுரங்கள் வழங்கியுள்ளார். அவரது முதற்பதிகம் விளைந்த திவ்யதேசம் இதுதான். 2. ரிஷிகேசத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ள ஜோஷிமட் என்ற இடந்தான் திருப்பிரிதி என்னும் கருத்து ஒன்றும் நிலவுகிறது. இந்த இடத்தில் தற்போது கோவில்களும், மூர்த்திகளும் உள்ளனர். இன்னுமொருசாரர் நந்தப் பிரயாகை என்னுமிடமே திருப்பிரிதியாகுமெனவும் கூறுவர். இவ்விரண்டும் அல்ல. அது எங்கோ இமய மலைக்கு உட்புறம் அமைந்துள்ளது என்றொரு கருத்துமுண்டு. இதில் தற்போது திருப்பிரிதி என்றழைக்கப்படும் ஜோஷிமட் திருப்பிரிதியாகாது. திருப்பிரிதி இமயத்திற்குள் உள்ளது என்று அறுதியிட்டுக் கூறுகிறார். ஸ்ரீவைஷ்ணவ சுதர்சன ஆசிரியர் ஸ்ரீமான் திரு. கிருஷ்ணசுவாமி ஐயங்கார். இவர் கூறும் கருத்துக்களே ஏற்றுக்கொள்வதற்கு உடன்பாடாய் இருப்பதாலும் அதுவே உண்மையாகுமாதலாலும் அவர் தமது கட்டுரையில் கூறியுள்ள கருத்துக்களை இங்கே சுருங்கச் சொல்கிறோம். அ) திருமங்கையாழ்வார் வதரி, சாளக்கிராமம், நைமி சாரண்யம், சிங்கவேள் குன்றம் திருமலை என்று வடக்கு தொட்டு தெற்கு நோக்கி வரிசைக் கிரமமாக மங்களாசாசனம் செய்து கொண்டே வருகிறார். இதில் வதரி எனப்படும் பத்ரிகாச்ரமம் ஜோஷி மடத்திற்கு வடக்கே அமைந்துள்ளது. ஜோஷி மடமே திருப்பிரிதியாக இருந்திருந்தால் ஆழ்வார் முதலில் ஜோஷி மடத்தை மங்களாசாசனம் செய்து விட்டு அதன்பிறகு பத்ரியை மங்களாசாசனம் செய்திருப்பர். ஆனால் ஆழ்வார் முதலில் திருப்பிரிதியை தமது திருமொழியில் 1-2ல் மங்களாசாசனம் செய்து விட்டு அதன் |