பக்கம் எண் :

602

மூலம் இமயத்தின் தென்பகுதியில் உள்ள வதரி முதலிய திவ்ய தேசங்களைக்
காட்டிலும் திருப்பிரிதியை வேறுபடுத்திக் காட்டுகிறார். இவ்வாறே பிரிதியில்
உள்ளவனென்றும் இமயத்துள் இருப்பவனென்றும் ஆழ்வார் திருவுள்ளம்
பற்றியதாலே ஏற்றினை இமயத்துள் எம்மீசனை என்ற பதத்திற்கு
பெரியவாச்சான் பிள்ளை பொருள் கூறுமிடத்து ஹிமவானில் திருப்பிரிதியில்
வந்து ஸந்நிஹிதனானவன் என்று அருளினார். (பெரியவாச்சான் பிள்ளை
கங்கையையோ வதரியையோ குறிப்பிடவில்லை. இமயத்தை ஹிமவான் என்று
குறிப்பிடுவது நோக்கத்தக்கது)     ஈ) திருமங்கையாழ்வார் தமது பாசுரங்களில்
திருப்பிரிதியின் இயற்கை காட்சிகளை விளித்துப் போகும்போது அங்கு வாழும்
காட்டு மிருகங்களை தமது பாக்களில் கூறிப்போகிறார்.

     விலங்கல் போல்வன விறலிருஞ் சினத்தன
          வேழங்கள் துயர் கூற
     விலங்கொள் வாளெயிற்றரியவை திரிதரு
          பிருதிசென்றடை நெஞ்சமே

    பெரிய யானைகளை இம்சித்துக் கொண்டு சிங்கங்கள் சஞ்சரிக்கும்
பிரதேசம் என்கிறார்.

     ஏனங்கள் வளைமருப் பிடந்திடக்
     என்று காட்டுப் பன்றிகள் வாழுமிடம் என்கிறார்.
     போர்கொள் வேங்கைகள்
     புனவரை தழுவிய பூம்பொழிலிமயத்துள்
    என்று போர் செய்தலையே தொழிலாக கொண்ட வேங்கைப் புலிகள்
திரியுமிடமென்கிறார்.

     இரும்பசியது கூர அரவமாலிக்கும் -
     பசியினால் பாம்புகள் பெருமூச்சு விடுமென்கிறார்.
     களிறென்று பெரிய மாசுணம்
     வரை யெணப் பெயர்தரு பிரிதி
    யானைகளை விழுங்கக்கூடிய மலைப் பாம்புகள் ஊர்ந்து செல்லக்கூடிய
இடமென்கிறார்.