பக்கம் எண் :

605

விமானம்

     கோவர்த்தன விமானம்

தீர்த்தம்

     இந்திர தீர்த்தம், கோவர்த்தன தீர்த்தம், மானஸரோவஸ்.

     மேலும் விபூதூர் வித்வான் கி.வேங்கிடசாமி ரெட்டியாரிடமிருந்து
கிடைத்த 108 திருப்பதியந்தாதியென்னும் கட்டளைக் கலித்துறையிலமைந்த
நூலில்,
 

     “நாரங்களுக் கிறைவன் பார்வதிக்கு நயந்தருள்வோன்
     வாசஞ்செய் மானச வாவி அனந்தன் வர்த்தனத்தில்
     பாரமர் பரிமளவல்லிக் கின்பாகத் தென்பால் துயிலும்
     ஆரம் செறி இமயப்பால் திருப்பிரித்திக் கரசே”

     என்று அமைந்துள்ள இப்பாட்டிலும் இவ்விவரங்களே காணப்படுகின்றன.

     இவைகள் பூர்வாச்சார்யர்களின் காலத்திற்குப் பிற்பட்ட நூல்களாயினும்
இவற்றில் கண்டுள்ள விபரங்களில் முக்கியமானவை ஆழ்வாருடைய
பாசுரங்களோடும் பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தோடும்
ஒட்டியிருப்பதைக் கண்டும் திருப்பிரிதியின் ஸ்தானத்தை நிர்ணயிக்கலாம்.

     ஊ) 108 திருப்பதியந்தாதி பாடலில் மான ஸரஸ் என்னும் தீர்த்தம்
இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. பண்டைப் புராணங்களும் இதிகாசங்களும்
மானஸரோ வரம் என்னும் இந்த நதியை பாரதத்தின் வட எல்லையாக
வர்ணிக்கின்றன. இந்நதி இன்றும் திபெத் நாட்டில் இதே பெயரில்
வழங்கப்படுகிறது. இது 54 மைல் சுற்றளவும் 200 சதுர மைல் பரப்பளவும், 250
அடிக்கும் மேலான ஆழத்தையும் கொண்டது. கடல் மட்டத்திற்கு மேல் 15000
அடி உயரத்தில் கடல் போல் விளங்குகிறது. பிரம்மன் தனது மனத்தாலே
(ஸங்கல்பத்தாலே) முதன் முதலில் பாரத தேசத்தின் வட எல்லையாக இந்த
ஏரியைச் சிருஷ்டித்தால் மானஸரஸ் என பெயர் உண்டானதாகக் கூறுவர்.
உலகிலேயே மிகப் பெரியதும் அழகியதுமாகையால் ஸரோவரம் என்னும்
புகழைப் பெற்றுள்ளது.

     மிக முக்கியமான இயற்கை காட்சியொன்று ஒரு திவ்ய தேசத்தில்
இருக்குமானால்