திருமங்கை அதை தமது பாடலில் குறிக்காமல் விடார். அவ்வாறெனின் இந்த ஏரியைக் குறித்திருக்கிறாராவெனின் முதல் பாசுரத்திலேயே தடஞ்சுனை பிரிதி என்று பிரிதிக்குத் தடஞ்சுனை என்றே பேரிட்டு மானஸரோ வரத்தையே உணர்த்துகிறார் என்பது நமது பதில். ஸரோவரம் என்பதை தடஞ்சுனை என்று தமிழாக்கியுள்ளார். தடஞ்சுனை பிரிதி பெரிய ஏரிகளை உடைய பிரிதி என்றும் பொதுவாய் பொருள் கொள்ளலாம். எ) மேலும் இங்குள்ள பெருமாளின் பெயர், பிராட்டியின் பெயர், சயன திருக்கோலம், போன்றவற்றையும், திருமங்கை தமது பாசுரங்களில் குறிக்கிறார். பணங்கொள் ஆயிரம் உடைய நல் அரவனைப் பள்ளி கொள் பரமா என்று இறங்கி வானவர் மணிமுடி பணிதர இருந்த நல்லிமயத்துள் | என்று பெருமாளின் திருநாமத்தோடு அவரின் சயனத் திருக்கோலத்தையும் குறிக்கிறார். இப்பாசுரத்திற்கு முன் உள்ள பாசுரத்தில் கரைசெய் மாகடல் கிடந்தவன் என்று திருப்பாற்கடல் நாதனை அனுபவித்து விட்டு அங்கே கிட்டமுடியாதாரும் அனுபவிக்கலாம்படி இங்கே தன் திருக்கோலத்தைக் காட்டுகிறான் என்னும் ஸங்கதி தோன்ற அப்படித் திருப்பாற்கடலில் சாய்ந்தருளினவன் இங்கே வந்து எழுந்தருளியிருக்கும் படியை அனுஸந்திக்கிறார் என்று பெரியவாச்சான் பிள்ளை இப்பாசுரத்திற்கு அவதாரிகை இட்டிருப்பதிலிருந்து திருப்பிரிதியின் பனங்கொள்ளாயிரமுடைய நல்லரவணைப் பள்ளி கொள் பரமனாகவே எம்பெருமான் சேவை ஸாதிக்கிறார் என்று விளங்குகிறது. எனவே புஜங்க சயனமில்லாத ஜோஷி மடக்கோவில் திருப்பிரிதியாய் இருக்க இடமில்லை என்பது தெளிவு. பார்வதியோடு சிவன் வாழும் கயிலை மலைக்கு அருகில் உள்ள திருப்பிரிதியில் எம்பெருமானைப் பார்வதிக்குப் பிரதயட்சமாக |