பக்கம் எண் :

614

எம்பெருமானைச் சரண்புகுந்து மோட்சம்புகும் பக்தர்கட்கு மிக எளிய
வழியான திருமந்திர உபதேசத்தை போதித்துத் தன்னை காட்டிக் கொடுத்த
தலம்.

     மகாலெட்சுமிக்கு மிகவும் பிடித்தமான பத்ரி (இலந்தை) எனப்படும்
மரத்தின் கீழே அமர்ந்ததால் பத்ரிகா-ஆஸ்ரமம் - பத்திரகாச்ரமம்
ஆயிற்றென்பர். உபதேசம் செய்வதற்கு ஆஸ்ரமம் அவசியமன்றோ.
எம்பெருமான் திருமந்திரத்தை உபதேசிக்க இந்த இடத்தை ஒரு ஆஸ்ரமமாக
தேர்ந்தெடுத்ததால் பத்திரகாஸ்ரமம் ஆயிற்றென்பர். இங்கு கோயிலைச்
சுற்றிலும் பனிமலைகள் உள்ளன. இதற்கு எதிர்புறம் அமைந்துள்ள நீலகண்ட
பர்வதம் காண்பதற்குப் பேரெழில் பொலிந்ததாகும்.

மூலவர்

     பத்ரி நாராயணன், சங்கு சக்கரத்துடன் சதுர் புஜங்களுடன் கிழக்கு
நோக்கி அமர்ந்த திருக்கோலம்.

தாயார்

     அரவிந்த வல்லி

தீர்த்தம்

     தப்த குண்டம்

ஸ்தல விருட்சம்

     பத்ரி, இலந்தை மரம்

விமானம்

     தப்த காஞ்ச விமானம்

காட்சி கண்டவர்கள்

     மானிடரூப சிஷ்யனான நர நாராயணன்.

சிறப்புக்கள்

     1. எம்பெருமான் மலைமேல் எழுந்தருளியுள்ளான். கடல் நடுவே
எழுந்தருளியுள்ளான். பரம பதத்தில் எழுந்தருளியுள்ளான். அந்தர்யாமியாக
பக்தர்களின் உள்ளத்தில் எழுந்தருளியுள்ளான். பனிபடர்ந்த சூழலில் மட்டும்
இருக்க வேண்டாமா என்ன? சீதள மானவன், க்ஷீராப்தியாக இருப்பவன், தண்
என்னும் குளிர் மலர்கள் கொண்ட மாலை பூண்டவன் பனிக்கடலில் பள்ளி
கோளைப் பழகவிட்டு ஓடிவந்தவன். பனிபடர்ந்த சிகரங்களுக்கு ஊடே மட்டும்
இருக்க வேண்டாமா என்ன, இருக்க வேண்டுமென நினைத்ததால்தான்,
எம்பெருமான்