எந்நேரமும் பனிகொட்டிக் கொண்டிருக்கும் இந்த இமயமலைச் சாரலில் பனிபடர்ந்த சூழலில் அமர்ந்தான் போலும். 2. 108 திவ்ய தேசங்களிலேயே இங்குதான் பகவான் ஆச்சாரியன் ரூபத்தில் எழுந்தருளிய ஸ்தலமாகும். மற்றெல்லா ஸ்தலங்களிலும் அவனருள் காட்டி அவனது பலத்தைக் காட்டி நின்றாலும் இங்கு மட்டும்தான் ஆச்சார்ய திருக்கோலத்தில் திகழ்கின்றான். பக்தர்களுக்காகவும் இவ்வுலகிற்காகவும், பிராட்டிக்காகவும், பிற ஸ்தலங்களில் தன்னை வெளிக்காட்டிய எம்பெருமான் திருமந்திரத்தை உபதேசம் செய்ய தன்னை ஆச்சார்யனாக வெளிப்படுத்திய ஸ்தலம் இது ஒன்றுதான். எனவேதான் இங்கு தனது இடது கைகளை யோக முத்திரையாகக் கொண்டு ஒரு தபஸ்வியின் வடிவில் இலந்தை மரத்தடியில் பத்மாசனத்தில் எழுந்தருளியுள்ளார். 3. இங்கு செல்வதற்கு டெல்லியிலிருந்து முதலில் ஹரித்துவார் வந்துவிடவேண்டும். கல்கத்தா-டேராடூன் ரயில் மார்க்கத்தில் ஹரித்துவார் அமைந்துள்ளது. எப்போதும் பனி பெய்வதால் கடுங்குளிரில் அமிழ்ந்திருக்கும் இப்பிரதேசத்திற்கு இரண்டு மூன்று உள்ளாடைகளுடனும் கம்பளிப் போர்வைகளுடனும் செல்ல வேண்டும். குளிர்தாங்கும் பருவம் இளமை என்பதால் (கிளரொளி யிளமை கெடுவதன் முன்னம் என்றாற்போல்) மிக இளமை வயதிலேயே இங்கு சென்று வந்துவிட வேண்டும். மிக்க இளம் வயதில் இங்கு செல்ல வேண்டுமென்பதை திருமங்கையாழ்வார் தமது பாசுரங்களில் குறிப்பிட்டுள்ளார். ஹரித்துவாரில் தங்குவதற்குப் பல வசதிகள் உண்டு. இங்கு தங்கி இங்குள்ள பிரம்ம குண்டம் என்னும் தீர்த்தத்தில் நீராடி 15 மைல் தொலைவில் உள்ள ரிஷிகேசம் சென்று அங்கிருந்து சுமார் 80 மைல் தூரம் பஸ் மூலம் சென்று பத்ரியை அடையலாம். ரிஷிகேசத்திலிருந்து பத்ரி செல்லும் வழியில்தான் கண்டமென்னும் கடிநகர் உள்ளது. (அந்த தலவரலாற்றில் பத்ரியை சேவித்துவிட்டுத் திரும்பும்போது கண்டமென்னும் கடிநகர் செல்லலாமென தெரிவித்துள்ளோம். அவ்விதம் செய்தலே நன்று) 4. பத்ரிநாத்தானது, அலகநந்தாவும், தோலி கங்காவும் சங்கமமாகும் இடத்தில் அமைந்துள்ளது. அலகநந்தாவின் கரையில்தான் கோவில் அமைந்துள்ளது. இந்த பத்ரி |