பண்டைய இந்தியாவில் தலைசிறந்து விளங்கிய அவந்தி தேசமே இன்றைய நேபாளம். இங்கு இமயத்தின் அடிவாரத்தை ஒட்டினாற்போல் ஹரிபர்வதம் என்னுமோர் மலை உள்ளது. இங்கு சக்ரதீர்த்தம் என்னும் பகுதியில் கண்டகி நதி உற்பத்தியாகின்றது. இந்தப் பகுதி தான் சாளக்கிராமம் என்றழைக்கப்படுகிறது. இந்த ஹரி சேத்திரத்தில் உள்ள சகல கற்களிலும், (குளிர், காற்று இவைகளில்லாமல் அமைந்துள்ள ஸைலகர்ப்பத்தில்) விஷ்ணுவின் சகல அம்சங்களோடு பொருந்திய சாளக்கிராம மூர்த்திகள் புண்ணியகாலங்களில் தோன்றுவதாக கூறப்படுகிறது. இங்குள்ள மூர்த்தியும் சாளக்கிராம வடிவத்தினர்தான். மூலவர் ஸ்ரீமூர்த்தி வடக்கு நோக்கி நின்ற திருக்கோலம். தாயார் ஸ்ரீதேவி தீர்த்தம் சக்ர தீர்த்தம், கண்டகி நதி விமானம் கனக விமானம் காட்சி கண்டவர்கள் பிரம்மா, சிவன், கண்டகி. சிறப்புக்கள் 1. சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும் ஒரு வகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கற்களாகும். இவைகள் நத்தைக் கூடு, சங்கு போன்ற பல வடிவங்களிலும், பல வண்ணங்களிலும் கிடைக்கின்றன. மஹாவிஷ்ணு தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்ற பூச்சியின் வடிவம் கொண்டு சாளக்கிராமத்தைக் குடைந்து அதன் கர்ப்பத்தை அடைந்து அங்கு ரீங்காரமான சப்தத்தில் இருந்து கொண்டே தன் முகத்தினால் பலவிதமான சுருள் ரேகையுடன் கூடின பல சக்கரங்களை வரைந்து பலவித ரூபங்களில் பல மூர்த்திகளை (அதாவது தனது அவதார ரூபங்களை) பல வடிவங்களில் விளையாட்டாக வரைந்து வெகு காலத்திற்கு அங்கேயே இருந்து பின் மறைந்து விடுவதாகக் கூறப்படுகிறது. |