களை சாஸ்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்து வாங்கிக் கொள்ளவேண்டுமென்பது நியதி. இதைப்பால் அல்லது அரிசி மீது வைத்திருந்து பின்னர் எடுத்துப் பார்த்தால் அதன் எடை முன்பு இருந்ததை விட கூடுதலாக இருக்கும். துண்டிக்கப்பட்டிருந்தாலும் அல்லது விரிந்து போனதாய் இருந்தாலும் சாளக்கிராமம் எங்கு இருக்கிறதோ அங்கு தோசமில்லை. சாளக்கிராமம் உடைந்திருந்தாலும் அதில் சக்கர ரேகைகள் இருந்தால் அது மிகவும் சிறப்பம்சமாகும். 5. சாளக்கிராமம் விற்பனை செய்வதை வாங்குதல் நன்றன்று. பெரியவர்களின் கையிலிருந்து வாங்குதல் நன்று அல்லது பிறரால் பூஜிக்கப்பட்ட சாளக்கிராமத்தைப் பெற்றுக் கொள்வதும் நன்று. நேபாளத்தில் கடைத்தெருவில் இதைக் குவித்து வைத்து விற்கிறார்கள். இதன் மீது புனித நீரை தெளித்துப் பூக்களைச் சொரிந்து புனிதப் படுத்தி விற்கிறார்கள். இருப்பினும் இங்கிருக்கும் பெரியவர்கள் அல்லது சாளக்கிராமத்தின் தனித்தன்மையை அறிந்தவர்களிடம் அதன் வண்ணம், அதில் அமைந்துள்ள ரேகைகள், ஆகியவற்றை ஆராய்ந்து அவர்களது ஆலோசனையின் பேரில் வாங்குதல் சிறப்பு. 6. சுமார் 20 ஆண்டுகட்கு முன்பு இராமேஸ்வரத்தில் ஏற்பட்ட ஒரு புயலின் போது கடலில் ஒரு சாளக்கிராமம் கிடைக்க அதனை ஸ்ரீராமர் பாதம் அமைந்திருக்கும் கந்தமான பர்வதம் அருகேயுள்ள ஆஞ்சநேயர் கோவிலில் (இராமேஸ்வரம் கோவிலிலிருந்து வடக்கே 5 மைல்) வைக்கப்பட்டுள்ளது. தேங்காயளவு பருமனான இந்தச் சாளக்கிராமத்தில் நரசிம்ம மூர்த்தியின் திருமுகம் ரேகை வடிவில் அமைந்துள்ளது. 7. நேபாளத்தின் தலைநகரான காட்மண்டுவில் இருந்து சுமார் 65 மைல் தூரத்தில் தாமோதர குண்டம் என்னும் ஓர் இடம் உள்ளது. இதுதான் சாளக்கிராமம் என்ற ஓர் கருத்துண்டு. இதுவும் கண்டகி நதிக் கரையில் தான் அமைந்துள்ளது. இருப்பினும் காட்மண்டுவிலிருந்து முக்தி நாராயணசேத்திரம் செல்லும் வழியில் உள்ள பூஜைக்குரிய ஸாளக்கிராமங்கள் உற்பத்தியாகக் கூடிய கண்டகி நதிக் கரையில் அமைந்துள்ள சேத்திரமே சாளக்கிராமமாகும். இவ்விடத்திற்குச் செல்ல நேபாள அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தருகிறது. மலையேறிச் |