பக்கம் எண் :

622

செல்ல வேண்டிய சூழ்நிலையில் அமைந்துள்ள இந்த யாத்திரையில் 50 பேர்
கொண்ட குழுக்களாகச் செல்லவே நேபாள அரசு அனுமதியளிக்கிறது.

     8. பெரியாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் மொத்தம் 12 பாசுரங்களில்
மங்களாசாசனம் செய்துள்ளனர். பெரியாழ்வார் சாளக்கிராமமுடைய நம்பியை
கண்ணனாக தலைக் கட்டுகிறார். திருமங்கையாழ்வார் ராமனாக காண்கிறார்.
இத்தலத்திற்கு திருமங்கை உகந்தருளிய பாசுரங்களில் இங்கு
எழுந்தருளியிருப்பவன் ராமனே என்று அறுதியிடுகிறார்.

     9. ஸ்ரீஇராமானுஜர் இங்கு எழுந்தருளியுள்ளார்.

     10. இங்கு பகவான் தீர்த்த ரூபியாவார்.

     11. வடநாட்டில் உள்ள முக்கிய நதிகள் எல்லாம் விஷ்ணு சம்மந்தம்
பெற்றிருப்பதைக் கண்ட கண்டகி நதியானவள் மஹாவிஷ்ணுவைக் குறித்து
கடுந்தவம் செய்து மஹாவிஷ்ணு தன்னிலும் அவதாரம் செய்ய வேண்டுமென
தவமிருக்க அதற்குகந்த எம்பெருமான் இதில் நித்ய அவதாரம் (சாளக்கிராம
ரூபியாக) செய்து கண்டகி நதிக்கு சிறப்பளிக்கிறார் என்பதும் ஓர் வரலாறு.