அடைக்கலமாயினர். பயங்கர மழை கொட்டியும் எவ்வளவோ இந்திர ஜாலங்கள் செய்தும் பயனின்றி போகவே இறுதியில் இந்திரன் வந்து கிருஷ்ணனிடம் மன்னிப்புக் கோரினான். இந்திரன் ஆணையிட்டவுடன் மேகங்கள் வாயைத் திறந்து கொண்டு சென்று கடல்நீரை அப்படியே கபளீகரம் செய்து பானையிலிருந்து கொட்டிக் கவிழ்த்ததைப் போல கொட்டியதாம். கடல்வாய்ச் சென்று மேகங்கவிழ்ந்திறங்கி கதுவாய்ப் பட நீர்முகந்தேறி யெங்கும் குடவாய்ப்பட நின்று கொட்டும் மழை - 267 | இவ்வாறு கொட்டு கொட்டு என்று கொட்டிய மழையைக் கண்ணன் தடுத்தானாம். தனது ஐந்து விரல்களையும் தாமரை மொட்டுப் போல் கவித்து வைத்து மலையைத் தூக்கி அந்தக் கைவிரல்கள் தாங்குவதற்கு தமது நெடுந்தோள்களை காம்பு போல் வளைந்து கொடுத்து ஆனாயசமாக தூக்கினானாம். இந்தக் காட்சியைப் பெரியாழ்வார் படம் பிடித்துக் காட்டும் விதத்தை பாருங்கள். செப்பாருடைய திருமாலவன்தன் செந்தாமரைக் கைவிரலைந்தினையும் கப்பாக மடுத்து மணி நெடுந்தோள் காம்பாகக் கொடுத்துக் கவித்தமலை எப்பாடும் பரந்திழி தெள்ளருவி இலங்கு மணிமுத்து வடம் பிறழ குப்பாய மென நின்று காட்சி தரும் கோவர்த்தன மென்னுங் கொற்றக் குடையே - 269 | குப்பாயமெனக் காட்சி கொடுத்ததாம். (குப்பாயமெனில் குடையை விரித்து தரையில் வைத்தது போலாம்) பெரியாழ்வார் கோவர்த்தன மலையை மட்டும் 10 பாக்களில் மங்களாசாசனம் செய்துள்ளார். 3. கோவர்த்தனத்திற்கு மயங்கி பெரியாழ்வார் 10 பாக்கள் நல்கினாரெனில் அவர் திருமகளார் ஆண்டாளோ பிருந்தாவனத்தில் கண்ணன் செய்த லீலைகளில் மயங்கி |