10 பாசுரம் நல்குகிறார். மாடுகளை மேய்த்துவிட்டு பிருந்தாவனத்திலிருந்து கண்ணன் எப்படித் திரும்புகிறானாம். இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி விட்டுக் கொண்டு விளையாட விருந்தா வனத்தே கண்டோமே - 637 | என்றும் குதித்துக் குதித்து விளையாடி முகமெல்லாம் வேர்த்து யானைக் கன்று எப்படி வருமோ அது போல பிருந்தாவனத்தில் விளையாடிக் களைத்து வந்தானாம். ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரோ போர்த்த முத்தின் குப்பாயப் புகர் மால் யானைக் குன்றே போல் வேர்த்து நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோமே - 640 | என்றும், ஒரு நாள் கடும் வெயிலில் கண்ணன் திரும்ப வேண்டியதாயிற்றாம். கண்ணன் மேனியில் வெயில் படக்கூடாதென்று கருடன் தன் சிறகுகளை விரித்து ஒரு மேலாடையைத் தலைக்கு மேல் விரித்துவிட்டதைப் போல் கண்ணன் மீது வெயில் படாமல் கொண்டுவந்தானாம். இந்தக் காட்சியை, மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகென்னும் மேலாப்பின் கீழ் வருவானை விருந்தா வனத்தே கண்டோமே - 639 (வினதையின் மகன் கருடன்) | கோவர்த்தனத்தையும், விருந்தாவனத்தையும் தந்தையும் மகளுமாய் மங்களாசாசனம் செய்து அந்தப் பகுதி முழுவதையுமே திவ்யதேசமாக்கி விட்டார்கள். |