4. மதுரா செல்பவர்கள் மதுரா, பிருந்தாவனம், கோவர்த்தன கிரி இங்கிருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள கோகுலம் இவைகளை வரிசைப் படுத்தி ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வோர் நாள் தங்கி கண்ணன் லீலைகளை மானசீகமாக உணர்ந்து திவ்யமான பக்தி உணர்வில் திளைத்து ஸ்ரீகிருஷ்ண நினைவுடன் திரும்பி வரலாம். கோகுலாஷ்டமி சமயத்தில் இங்கே சென்றால் ஆடல் பாடல்களும் திவ்ய நாம பஜனைகளும் உபன்யாசங்களும், கிருஷ்ண நாடகங்களும் ஒரே விழாக் கோலமாகத் தான் இருக்கும். 5. பெரியாழ்வார், ஸ்ரீஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகிய 5 ஆழ்வார்களால் 50 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். 6. ஆழ்வார்களால், மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவில்களும், மூர்த்திகளும் தற்போது இல்லையென்று சொல்கிறார்கள். இருப்பினும் இந்தப் பிரதேசம் முழுவதுமே ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளதால் இப்பகுதி முழுவதுமே திவ்ய தேசம்தான். தற்போது ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இடங்களிலேயே இரண்டு ஆலயங்கள் எழுப்பப்பட்டு அவை துவாரகா நாத்ஜி, மதுரா நாத்ஜி என்று அழைக்கப்படுகின்றன. 7. கிருஷ்ணனின் அவதார ஸ்தலமான கிருஷ்ண ஜென்ம பூமியில் தற்போது நவீன உலகத்திற்கேற்ப விடுதிகளும், தங்குமிடங்களும் நவீன வசதிகளுடனும் கட்டப்பட்டுள்ளன. பண்டைமுறைப்படியான கட்டிடங்களும் மண்டபங்களும் உண்டு. இங்குள்ள கோவில்களில் மிகத்திரளான அளவில் பக்தர்கள் ஸேவிப்பதற்கேற்றவாறு பெரிய பெரிய மண்டபங்களும், வளாகங்களும், தற்காலத்திய முறைப்படி அமைக்கப்பட்டுள்ளன. 8. பிருந்தாவனத்தில் தென்னக முறைப்படி அமைக்கப்பட்ட ஸ்ரீரெங்கநாதர் கோவில் ஒன்று உள்ளது. ரங்கமந்திர் என்றழைக்கப்படும் இந்த விசாலமான கோவிலில் நுழைந்தவுடன் தமிழ்நாட்டிற்கே வந்துவிட்டோமோ என்ற எண்ணம் வந்துவிடும். காரணம், இங்கு எம்பெருமானின் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் தமிழ்நாட்டு |