பக்கம் எண் :

631

வைணவர்களேயாவர். இங்கு ஸ்ரீரெங்கநாதர், ஸ்ரீஆண்டாள்,
திருவேங்கடமுடையான், ஸ்ரீஇராமானுஜர் ஆகியோர்கட்கும் சன்னதிகள் உண்டு.
இவர்களை வரிசைக் கிரமமாக சேவித்து வரும்போது தமிழ்நாட்டுக்
கோவில்களில் பெருமாளை தரிசிப்பது போன்ற எண்ணம் வந்து விடும்.
தமிழகத்திலிருந்தும் மற்றும் தென் மாநிலங் களிலிருந்தும் வரக்கூடிய
பக்தர்களுக்கும், அடியார்கட்கும் இக்கோவில் கைங்கர்யத்தில் ஈடுபட்டுள்ள
தமிழக வைணவர்கள் பேருதவி புரிந்துவருகின்றனர்.