பக்கம் எண் :

632

103. கோகுலம் (ஆய்ப்பாடி)

     தாய்மார் மோர் விற்கப் போவார் தகப்பன் மார்
          கற்றானிரைப் பின் போவர்
     நீ யாய்ப்பாடி யிளங்கன்னி மார்களை
          நேர்ப்படவே கொண்டு போதி
     காய்வார்க் கென்று முகப்பனவே செய்து
          கண்டார் கழறத் திரியும்
     ஆயா, உன்னை யறிந்து கொண்டே உனக்
          கஞ்சு வனம்மம் தரவே (231)
                  பெரியாழ்வார் திருமொழி 3-1-9

     தன்னைத் தாயாகப் பாவித்துக் கொண்டு கண்ணனைக் குழந்தையாக
பாவித்துக் கண்ணனுக்கு பால் கொடுக்க ஒரு தாயின் மனோபாவத்தில்
பெரியாழ்வார் அழைக்கிறார்.

     இந்த ஆயர்பாடியில் அன்னையர்கள் மோர் விற்கப் போய்விடுவர்.
அப்பன்மார்கள் பசுமேய்க்கச் சென்றிடுவர். ஆனால் கண்ணா நீயோ
இங்குள்ள கன்னிப் பெண்களையெல்லாம் உன் பேரழகைக் காட்டி மாயம்
செய்து உன்னைப் பின் தொடர வைத்துக் கொண்டு போய் விடுகிறாய்.
உன்னைக் கண்டிப்பவர்க்குக் கூட அவர்கள் சந்தோஷம் அடையும்
செயல்களைச் செய்யக்கூடிய கண்ணனே உன்னைப் பற்றித் தெரிந்து கொள்ள,
எனக்கு பெருவியப்பாயுள்ளது. ஆம் உன்னைப் பற்றி நான் தெரிந்து
கொண்டேன். உனக்கு (அம்மம்) பால் தரவே எனக்குப் பயமாக உள்ளது
என்று யசோதையின் (தாய்) மனோபாவத்தில் பெரியாழ்வாரால் மங்களாசாசனம்
செய்யப்பட்ட இந்த கோகுலம் என்னும் ஆய்ப்பாடி டெல்லியிலிருந்து ஆக்ரா
செல்லும் ரயில் பாதையில் உள்ள மதுரா ரயில் நிலையத்திலிருந்து சுமார் 8
மைல் தூரத்தில் உள்ளது.

     கண்ணனின் பாலபருவ லீலைகள் நடந்த இடமே கோகுலம். கண்ணன்
சின்னஞ்சிறுவனாக இருந்து இந்த ஆயர்பாடியில் செய்த லீலைகள் எல்லாம்
எண்ணற்ற நூல்களில் வருணிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வெண்ணெய்
உண்டது, இளங்கன்னிமார்களை ஏய்த்தது, சிற்றில் சிதைத்தது. நந்த
கோபாலனாக வளர்ந்தது, மாடு மேய்க்கப் போனது என்றிவ்வாறான பலவித
லீலைகளை நடத்திய இந்த கோகுலம்