பக்கம் எண் :

633

முழுவதையும் ஆழ்வார்கள் தம் பாக்களில் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

வரலாறு

     இத்தலம் பற்றியும், கோகுலம் பற்றியும் ஸ்ரீமத் பாகவதம் உட்பட
எண்ணற்ற வடமொழி நூல்கள் எடுத்தியம்பியுள்ளன. சுருக்கமாக இதன்
வரலாற்றை ஒரே வரியில் சொன்னால் கண்ணனின் பால பருவ வளர்ச்சிதான்
கோகுலம்.

மூலவர்

     நவமோகன கிருஷ்ணன், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.

தாயார்

     ருக்மணி தேவியார், சத்திய பாமா

விமானம்

     ஹேம கூட விமானம்

காட்சி கண்டவர்கள்

     கோகுல வாசிகள்

சிறப்புக்கள்

     1. இங்கு யமுனையை அடைந்ததும் கண்ணன் வாசனை வந்துவிடுகிறது.
ஒரு காலத்தில் (துவாபரயுகத்தில்) இங்கு கண்ணன் பாலகுமாரனாக ஓடியாடி
விளையாடி லீலை செய்த காட்சிகளை நினைவு கூறும்போது மெய்சிலிர்க்க
வைக்கிறது. இங்கு கோகுல் என்று அழைக்கப்படும் இடத்திலிருந்து சுமார் 1
கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடம் தான் உண்மையான கோகுலப் பகுதி
என்று சொல்லப்படுகிறது. அதாவது எல்லாமே கோகுலம் என்று சொன்னாலும்
இந்த இடம் மட்டுமே கண்ணனின் ஸாநித்தியம் நிரம்பி வழிந்த இடமாகும்.
புராண்கோகுல் என்று அழைக்கப்படும் இந்தப் பழைய கோகுலத்தில் யமுனை
நதிக்கரையில் ஒரு ஸ்தலம் அமைந்துள்ளது. இங்கு நந்தகோபர், யசோதை,
பலராமர், மற்றும் தொட்டில் கிருஷ்ணன் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்.
இங்குள்ள விக்கிரகங்கள் யாவும் மரத்தினால் செய்யப்பட்டவையாகும். மர
விக்கிரகங்கள் காண்பதற்குப் பேரெழில் பொருந்தியனவாகும்.