பக்கம் எண் :

635

கொண்டு வரப்படுகிறான். நந்த கோபன் குழந்தையை எடுத்துக் கொஞ்சி
மகிழ்கிறான். ஆயர்கட்குப் பொன்னும் மணியும் பரிசலாக வாரி வழங்குகிறான்.
கண்ணன் வரவினால்கோகுலமே மகிழ்ச்சிப் பெருக்கில் தத்தளித்துக்
கொண்டிருக்கிறது. ஆண்டுதோறும் இந்த தினம் வந்தவுடன் கோகுலம் விழாக்
கோலம் பூணுகிறது. இந்த நிகழ்ச்சியை நந்தோற்சவம் என்ற பெயரில் இன்றும்
கொண்டாடுகின்றனர். இன்றும் ஜன்மாஷ்டமியின் மறுநாள் (கோகுலாஷ்டமியின்
மறுதினம்) இதே பெயரில் இந்த உற்சவம். வடநாட்டிலும், பிற முக்கிய
ஸ்தலங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள கௌடில்யா
மடத்தில் இந்நிகழ்ச்சி ஆண்டுதோறும் மிக்க சிறப்புடன் தற்போதும்
நடத்தப்பட்டு வருகிறது.

     கண்ணன் கோகுலம் வந்துற்ற செய்தியைக் கேட்டதும் அவ்வூர்
வாசிகளின் ஆராவாரத்தை பெரியாழ்வார் எப்படிச் சொல்கிறார் பாருங்கள்.

     ஆயர்கள் வேகமாக ஓடி வருகிறார்களாம். விரைந்தோடி வரும்போது
கால் தடுமாறி விழுந்து விடுகின்றனராம். அச்சமயம் கண்ணனைப் பார்த்துவிட்டு
எதிரே வருபவர்களை ஆனந்தம் மிகுதியால் ஆரத்தழுவிக் கொள்கின்றனராம்.
கண்ணனைப் பார்த்துவிட்டு வந்து விட்டீர்களா என்று சந்தோஷம் மிகுதியால்
ஆலிங்கனம் செய்துகொள்கின்றார்களாம். எதிரும் புதிருமாக வருவோர்
போவோரிடமெல்லாம் நம்பி எங்கிருக்கிறான். நாராயணன் எங்கிருக்கிறான்
என்று கேட்கிறார்களாம். பலவித இசைக்கருவிகளை எடுத்து கொட்டி முழக்கி
ஆட்டம் போடுகிறார்களாம். இந்தக் கதியாயிற்று ஆயப்பாடி என்று
வர்ணிக்கிறார்.
 

     ஓடுவார் விழுவார் உகந்தாலிப்பார்
          நாடுவார் நம்பி நாரணனெங்குற்றா னென்பார்
     பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
          ஆடுவார்களு மாயிற்றாய் பாடியே - 14

     8. இந்த ஆயர்பாடியில் கண்ணனின் சேஷ்டைகளைப் பொறுக்காத
யசோதை ஒரு நாள் கண்ணனைக் கட்டிப் போட்டு விட்டாள். இந்நிகழ்ச்சியை
ஆய்ச்சியர் குரவையில் இளங்கோவடிகள் கூறுகிறார்.