பக்கம் எண் :

636

   வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி
        கடல்வண்ணன் பண்டொரு நாள் கடல்வயிறு கலக்கினையே
   கலக்கிய கை அசோதையார் கடைகயிற்றால் கட்டுண்ணகை
        மலர்க்கமல உந்தியாய் மாயமோ? மருட்கைத்தே.

     மலையை மத்தாகக் கொண்டு வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகக்
கொண்டு கடலை கலக்கிய உன் கைகளை தன் வீட்டில் கிடந்த சாதாரண
கயிற்றை எடுத்துக் கட்டிப் போட்டு விட்டாளே அசோதையென்று இவர்
மயங்குகிறார்.

     ஆனால் ஆழ்வாரோ இவ்வாறு உன் அன்னை உன் கைகளை
உரலினோடு இணைத்துக் கட்டிப் போட்டாளே அதனை எப்படி ஏற்றுக்
கொண்டு அந்த உரலுடன் இணைந்திருந்தாயோ என்று ஏங்குகிறார்.
 

     மத்துறு கடை வெண்ணெய் களவினில்
          உரலிடை யாப்புண்டு
     எத்திறம் உரலினோடு இணைந்திருந்து
          ஏங்கிய எளிவே
                         என்பது நம்மாழ்வார்

     9. பூதகியை கொன்றது, கம்சவதம் செய்தது, கன்றுகள் மேய்த்து
திரும்பியது, நந்த கோபர் வீட்டுக்கு முன் இருந்த மரங்களை முறித்தது
கோபியரோடு ஆடியது, சிற்றில் சிதைத்து என்று ஆயர்ப்பாடி வரலாற்றை
நாளெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கலாம்.

     10. எம்பெருமான் “ரஸோ வைஸா” என்று வேதம் வர்ணிக்கிறது
அதாவது நீதான் சிறந்த ரஸம். பகவானை விட சிறந்த ரஸனை உள்ளவன்
இல்லை என்று வேதம் வர்ணிக்கிறது.

     இந்த ரஸோ வைஸ என்பது கிருஷ்ணவதாரத்திற்கே அதிலும் குறிப்பாக
கோகுல வாசத்திற்கே சாலவும் பொருந்தும் என்பது பெரியோர் வாக்கு.

     எம்பெருமானே நீ மகாவல்லவன். அர்ச்சாவதாரத்தில் (கண்ணனாக)
குருந்த மரங்களை முறித்தாய். பரசுராமனை அடக்கினாய். விரோதிகளை
அழிக்காமல் இருக்கமாட்டாய். அது உனது பொழுதுபோக்கு. கோபிகா
ஸ்திரீகளோடு இரண்டறக் கலந்திருந்தாய். உன்