பக்கம் எண் :

637

அன்னைக்கு உனது வாயில் சகல பிரபஞ்சங்களையும் காட்டியது போல
(அன்னை போன்ற உள்ளம் உள்ளோர்க்கு) உனது சுயரூபத்தைக் காட்டுகிறாய்.
இப்படி வேறுபட்ட ரஸானுபவங்கள் பெற்றவனாய்த் திகழ்கிறாய். இவ்வுலகத்து
உயிரினங்கள் எல்லாம் உன் ரஸானுபவத்திலேயே பொழுது போக்குகின்றன.
நீயும் இந்த ரஸனையில் கலந்து மூழ்கியுள்ளாய். ரசிகன் உள்ள இடத்தில்
உள்ள பொருள்கள் எல்லாம் ரசப்பொருட்களாகவே இருக்கும். ரசிகர்களும்
ரசிகனைச் சுற்றியே வாழ்வர்.

     ரஸோ வை ரஸ, என்று வேதமும் உன்னைச் சிறந்த ரஸம் என்கிறது. நீ
இருக்கும் இடம் ரஸம் நிறைந்ததாகவே இருக்கிறது. கிருஷ்ண ரஸாயணம் பிப
என்றார் குலசேகரர். அவர் சொன்னபடி கிருஷ்ணரஸாயணத்தை (கிருஷ்ண
சரித்திரங்களை) உண்டு சுவைப்பதிலேயே உயிரினங்களும்
காலங்கடத்துகின்றன.

     என்னே அருமையான ரஸபாவனையில் மூழ்கியுள்ளனர் பெரியோர்கள்.