பக்கம் எண் :

638

104. திருத்துவாரகை

     காலை யெழுந்திருந்து
          கரிய குருவிக் கணங்கள்
     மாலின் வரவு சொல்லி
          மருள் பாடுதல் மெய்மை கொலோ
     சோலைமலைப் பெருமாள்
          துவாரா பதி யெம்பெருமாள்
     ஆலினிலைப் பெருமாள்
          அவன் வார்த்தை யுரைக்கின்றதே (594)
                     நாச்சியார் திருமொழி 9-8

     மானிடர்கட்கும் முன்பாகவே காலையில் துயில் நீத்து எழுந்திருக்கும்
குருவிக் கூட்டமெல்லாம் ஆலமரத்தினிலையில் ஒரு பாலகனாய் பள்ளி
கொண்ட இந்த துவாரகை எம்பெருமானின் பெயரைக் கூவிக் கொண்டு
திரிகிறதே என்று ஸ்ரீஆண்டாளால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம்
இந்தியாவில் புகழ்பெற்ற ஸ்தலமாகவும், எந்நேரமும் பக்தர் கூட்டம் பாடிப்
பரவசித்துக் கூடிக் குலவும் இடமாகவும் திகழ்கிறது. இத்தலத்தைப் பற்றிச்
சொல்லாத வடநாட்டுப் புராணங்களே இல்லையென்று சொல்லலாம்.

     இந்தத் துவாரகாபுரி மகாத்மா காந்திஜி பிறந்த இன்றைய குஜராத்
மாநிலத்தின் சௌராஷ்டிராக் கடலோரம் அமைந்துள்ள ஒகா துறைமுகத்திற்கு
அருகில் ஓடக்கூடிய கபிலா என்னும் புண்ணிய நதிக்கரையில் அமைந்துள்ளது.

     குஜராத்தின் தலைநகரமான ஆமதாபாத்திலிருந்து வீராம்காம் வழியாக
ஒகா செல்லும் ரயிலில் ஏறி இத்தலத்தை அடையலாம். ஒகா செல்லும்
பாதையில் துவாரகா ஒரு ரயில் நிலையமாகும். இந்தப் புகைவண்டி
நிலையத்திலிருந்து கோவில் சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஒகா
துறைமுகம் இங்கிருந்து சுமார் 20 மைல் தொலைவாகும்.

     தற்போதுள்ள ஆலயம் 1500 ஆண்டுகட்குமுன் கட்டப்பட்டதாகும்.
உண்மையான துவாரகை கடலுள் மூழ்கிவிட்டது. இந்தக்கோவிலை இங்குள்ள
மக்கள் துவாரகா நாத்ஜி ஆலயம் என்றே அழைக்கிறார்கள். இப்போதுள்ள
கோவிலும் நான்காவது முறையாகக் கட்டப்பட்டதாகும். கடந்த 5000
ஆண்டுகளாக அவ்வப்போது ஏற்பட்ட கடல் கோளாலும் பிற

     இன்னல்களாலும் இத்தலம் பாதிக்கப்பட்ட போதெல்லாம் மீண்டும்