மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள அமைப்பு சுமார் 1500 ஆண்டுகட்கு முன்பு புதுப்பிக்கப்பட்ட அமைப்பாகும். கண்ணபிரானின் சரித்திரத்தோடும், பாரதப் போரினோடும் பின்னிப் பிணைந்து கிடக்கும் இந்த துவாரகாபுரி அமைந்துள்ள மாநிலம் தான் இன்றைய இந்தியா சுதந்திரம் பெறக் காரணமான மகானையும் ஈன்று அன்று போல் இன்றும் தன் ஒல்காப் புகழை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. மூலவர் துவாரகா நாத்ஜி. கல்யாண நாராயணன், மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம். தாயார் கல்யாண நாச்சியார் (ஸ்ரீலட்சுமிதேவி) ருக்மணி, அஷ்டமஹிஷிகள். தீர்த்தம் கோமதி நதி விமானம் ஹேம கூட விமானம் காட்சிகண்டவர்கள் கண்ணன் வாழ்ந்த போதிருந்த துவாரகா வாசிகள் மற்றும் திரௌபதி சிறப்புக்கள் 1. இங்கு செங்கோல் செலுத்தி மன்னாதி மன்னனாக வாழ்ந்த கண்ணபிரானை துவாரகா நாத்ஜி என்றே இங்குள்ள மக்கள் அழைப்பர். எவ்வளவு அரசியல்மாற்றங்கள் வந்தாலும் இங்குள்ள மக்கள் கண்ணனே தங்கள் மன்னன் என்று எண்ணி வாழ்கின்றனர். தங்களை துவாரகா நாத்ஜியின் பிரஜைகளாக இன்றும் எண்ணி இறுமாப்பெய்துகின்றனர். 2. இங்குள்ள ஸ்ரீகண்ணன் கோவில் மிகப்பெரிய அரண்மனை போன்று அமைந்துள்ளது. இங்கு அவனது அஷ்ட மகிஷிகட்கும் அண்ணன் பலராமனுக்கும் குரு துர்வாசருக்கும் தனித்தனியே சன்னதிகள் உண்டு. 3. இங்கே கண்ணனுக்கு உணவும் உடையும் ஓயாமல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 17 முறை உணவு கொடுத்து மணிக்கொருதரம் |