பக்கம் எண் :

662

5. விருஷபாத்தரி

     விருஷபாசுரன் என்னும் அரக்கனுக்கு இம்மலையில் திருமால் மோட்சம்
அளித்தார். அவன் வேண்டுகோளுக்கிணங்க அவன் பெயராலேயே
விருஷபாத்ரி என மொழியப்படுவதாக ஐதீஹம்.

6. அஞ்சனாத்ரி

     அனுமனின் தாய் அஞ்சனை. அவள் இந்த மலையிலே தவம் செய்தாள்.
மகப்பேறு வேண்டினாள். ஆதிவராஹ மூர்த்தியின் அருளால்
ஆஞ்சநேயனைப் பெற்றாள். அஞ்சனை தவமியற்றியதைக்கொண்டு
அஞ்சனாத்ரி ஆயிற்று.

7. ஆனந்தாத்ரி

     ஆதிசேடனும் வாயு தேவனும் தங்களில் யார் பலவான் என்பதைக்
காண்பிக்க தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு மேருமலையின்
சிகரங்களை ஆளுக்கொன்றாகத் தகர்த்துக்கொண்டு இப்பெருமாள்
முன்னிலையில் வீழ்த்த, பலத்தில் இருவரும் சமமானவர்களே என்று
பெருமாளின் திருவாக்கும் திருவருளும் பெற்று ஆனந்தமுற்றார்கள்.
ஆதலின் ஆனந்தாத்ரி ஆயிற்று.

     2. தொண்டரடி பொடியாழ்வார், மதுரகவியாழ்வார் ஆகிய இருவர் தவிர
மற்ற 10 ஆழ்வார்களும் இம்மலையைப் பற்றியும், வேங்கடவனைப் பற்றியும்
பாசுரங்கள் சமர்ப்பித்துள்ளனர். மொத்தம் 202 பாக்களுக்கு மேல்
மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. வேங்கடவனுக்கு ஆழ்வார்கள் அருளிய
மங்களாசாசன பாக்களைத் தொகுத்து ஸ்ரீவேங்கட மங்களாசாசனம். என்னும்
தனிப்பெரும் நூலொன்றே செய்துவிடலாம் ஒவ்வொரு ஆழ்வாரும் ஒவ்வொரு
வகையில் வேங்கடவனின் மகிமைகளைக் கூறி நிற்பதை எழுத்துக்களில்
அடக்கிவிட முடியாது.

     3. குலசேகர ஆழ்வார் திருமலையில்வாழும் தாவரங்களிலோ,
பிராணிகளிலோ, ஒன்றாகப் பிறக்க மாட்டேனா என்று மன்றாடுகிறார்.
திருமலையில் ஒரு படிக்கல்லாகக் கிடந்து வேங்கடவனைத் தரிசிக்கமாட்டேனா
என்று படியாய்க் கிடந்து பவளவாய் காண்பேனா என்கிறார். இதனால்தான்