திருவேங்கடமுடையானின் முன் இருக்கும் பொற்படிக்கு குலசேகரப்படி என்றே பெரியோர் பெயரிட்டுள்ளனர். 4. தேனோங்கு நீழற் திருவேங்கடமென்றும் வானோங்கு சோலை மலையென்றும் - தானோங்கு தென்னரங்க மென்றுந் திருவத்தியூர் என்றுஞ் சொன்னார்க்கு உண்டோ துயர்
| என்று பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியிருக்கிறார். பெருந்தேவனார் சங்க காலத்துப் புலவர். இவர் பாரதத்தை வெண்பாச் செய்யுட்களாகப் பாடியுள்ளார். இவர் இதே வெண்பாவில் திருமலை திருமாலிருஞ்சோலை, திருவரங்கம், காஞ்சி போன்ற ஸ்தலங்களையும் பாடியுள்ளார். மேற்படி ஸ்தலங்களின் பெயர்களைச் சொன்னவர்க்குத் துயர் உண்டோ, துயரில்லை என்பது பொருள். திருவேங்கடம் என்பது புஷ்ப மண்டபமாகும். சிந்துபூமகிழ் திருவேங்கடம் என்பது நம்மாழ்வார் வாக்கு, திருவரங்கத்திற்கு போக மண்டபம் என்றும் காஞ்சிபுரத்திற்கு தியாக மண்டபம் என்பதும் பெயர். 5. கலியுகம் முடியும்வரை பெருமாள் தனது சானித்தியத்தை இங்கே இருந்து வழங்கி பக்தர்கட்கு அருள் பாலித்து பாவங்களைப் போக்கி நிற்கிறார் என்பது ஐதீஹம். இதற்கு ஆயிரக்கணக்கான உதாரணங்களை வேங்கடவன் அருள் புரிந்த நிகழ்ச்சிகளையும் எடுத்துக்காட்டலாம். விரிவஞ்சி ஒன்றை மட்டும் பகர்கிறோம். குறும்பறுத்த நம்பி என்பவர் திருமலையில் மண்பாண்டங்கள் செய்து வாழ்ந்தவர். மண்பாண்டம் செய்யும்போது கையில் ஒட்டிக் கொண்டுள்ள மண்ணினால் சிறுபுஷ்பங்கள் செய்து மானசீகமாய் வேங்கடவனுக்குச் சமர்ப்பித்து ஆராதனை செய்து வந்தார். இவரது காலத்தில் வாழ்ந்திருந்த தொண்டை மன்னனும் வேங்கடவன் பால் மிக்க பக்தி பூண்டொழுகினான். இம்மன்னன் தங்கத்தால் புஷ்பங்கள் செய்து வேங்கடவனுக்கு சமர்ப்பித்து வந்தான். ஒரு நாள் காலையில் இம்மன்னன் வேங்கடவனைத் தரிசிக்க சன்னதிக்குச் செல்லும்போது தான் சமர்ப்பித்த தங்கப் புஷ்பங்கள் யாவும் சிதறுண்டு பூமியில் கிடப்பதையும் மண்புஷ்பங்கள் வேங்கடவனின் திருமேனியை அலங் |