பக்கம் எண் :

664

கரிப்பதையும் கண்டு என்னவென்று விசாரிக்க குறும்பறுத்த நம்பிகள்
சமர்ப்பிக்கும் புஷ்பங்கள் இவையென்று அறிந்து குறும்பறுத்த நம்பியின் பக்தி
மேன்மையைக் கண்டு நம்பியைத் தொழுதுசென்றான் தொண்டை மன்னன்.

     இவ்விதம் தன் மீது உண்மையான பக்தி கொண்டோரின் மேன்மையை
வேங்கடவன் உலகறியச் செய்தான். பொய்யான பக்தியுடனும், ஆடம்பரமான
பக்தி வேஷத்தையும், சரணாகதித்துவம் இல்லாத நேரத்திற்கேற்றவாறு போடக்
கூடிய பக்திவேஷத்தையும் உதாசீனப்படுத்தி தூயபக்தியில் நிறைந்த உள்ளம்
கொண்ட பக்தர்களின் மேன்மையை உலகறியச் செய்துகொண்டே இருக்கிறான்
வேங்கடவன்.

     6. திருமலை வரலாற்றை எழுதிய ஒரு நூலாசிரியர் கீழ்க்காணும் ஒரு
சுவாரஸ்யமான விபரத்தை கூறுகிறார்.

     ஸ்ரீனிவாசன் திருக்கல்யாணத்தின் போது ஸ்வாமி புஷ்கரிணியில்
சாதமும், பாப விநாசத்தில் சாம்பாரும் ஆகாச கங்கையில் பாயாசமும், தும்புரு
தீர்த்தத்தில் சிதரா அன்னங்களும், குமார தீர்த்தத்தில் அவியல் மற்றும்
பொரியல்களும் செய்யப்பட்டதாம்.

     7. அகோபில மடத்தின் முதலாவது ஜீயர் சுவாமிகளான ஸ்ரீஆதிவன்
சடகோப தீந்தரமகாதேசிகன் என்னும் ஜீயர் திருமலைக்கு படிக்கட்டுகளை
முதன் முதலில் அமைத்தவர்.

     8. மகாஞானிகளும், கள்ளங்கபடமற்ற பக்தர்களும் வந்து குவிந்து
கொண்டே இருக்கும் இந்ததிருமலையில் தீர்த்த கைங்கர்யம் செய்து
கொண்டிருந்த திருமலை நம்பிகள் இராமானுஜருக்கு ராமாயண பாடம் கற்றுத்
தந்தவர் ஆவார். மணவாள மாமுனிகளும் இங்கு பலமுறை
எழுந்தருளியுள்ளார்.

     9. இங்கு புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோத்ஸவம்
காணக்கிடைப்பதரிது. பிரம்மனே இங்கு வந்து இந்த உற்சவத்தை நடத்தி
வைப்பதாக ஐதீஹம். இச்சமயத்தில் இங்கு வந்து வேங்கடவனைச்
சேவிப்பவர்களின் சகல பாவங்களும் தொலைகின்றன என்று புராணங்கள்
அறுதியிடுகின்றன. இந்த உற்சவத்தின் போது திருமலை வண்ண வண்ண
விளக்குகளால் அலங்காரம் பூண,