| வண்ண வண்ண உடைகளில் பக்தர்கள் பஜனை செய்து ஆடியும் பாடியும் வருவது கண்கொள்ளாக் காட்சியாகும். 10. திருமலையானின் வலமார்பில் மகாலெட்சுமியும், இடமார்பில் பத்மாவதியும் உறைகின்றனர். பத்மாவதி தாயார்தான் திருச்சானூர் என்னும் அலமேலுமங்கா புரத்திலிருந்து அருள்பாலிக்கிறார். திருமலைவந்தவர்கள் இங்கு பிராட்டியை வழிபட்டுச் சென்றால்தான் திருமலைப் பயணம் பூர்த்தியடைவதாக ஐதீஹம். கார்த்திகை மாதம் சுக்லபட்ச பஞ்சமியில் இங்கு பிரம்மோத்சவம். இந்த உற்சவத்தின் கடைசி நாளன்று வேங்கடவன் கூரைச் சேலை, ஆபரணங்கள் மலர்மாலைகள் ஆகியவற்றுடன் யானைமேல் மேளதாளத்துடன் வருவார். அவர் கொண்டு வந்த ஆடை அணிகலன்களை பிராட்டி அணிந்துதான் கடைசி நாள் உற்சவன் நடைபெறுகிறது. தொண்டைமான் கனவில் வந்து எம்பெருமான் கூறியதைப் போன்றே இக்கோவில் கட்டப்பட்டதென்பர். இங்குள்ள பத்ம ஸரோவரத்ர்த்தம் மிகவும் பிரசித்தி வாய்ந்ததாகும். உலக நன்மைக்காக பிரம்மா இங்கு இரண்டு தீபங்களை ஏற்றிவைத்ததாகவும் அவைகள் இன்றும் பிரகாசிப்பதாயும் வரலாறு. 11. இங்கு செலுத்தப்படும் காணிக்கை அளவிட முடியாததாகும். பக்தர்கள் கொஞ்சமும் லட்சியம் செய்யாமல். லட்சலட்சமாக இங்குகொண்டு வந்து குவிப்பர். இவருக்குத் தினசரி வருமானமே லட்சங்களைத் தாண்டும். அதேபோல் முடிக்காணிக்கையும் இங்கு நடைபெறுவது போல் உலகில் எங்கும் நடைபெறுவது இல்லை. இங்கு தங்குவதற்கு தர்ம சத்திரங்களும், வாடகைக் சத்திரங்களும் ஏராளம். தற்போது இலவச ததியாரதனமும் நடைபெறுகிறது. நினைத்தாலே இனிக்கும் திருப்பதி லட்டு இங்கு போல் வேறெங்கும் தெய்வச் சவை ததும்ப அமைந்ததில்லை. 12. இம்மலையின் இயற்கைக் காட்சிகளில் நெஞ்சு பறிகொடுத்த ஆழ்வார்கள் காட்டியுள்ள காட்சிகளில் ஒன்றை மட்டும் இங்கு காட்டுவோம். மதங்கொண்ட ஒரு ஆண்யானை செழித்து வளர்ந்தோங்கியுள்ள மூங்கில் கழைகளை கடிக்கிறது. அதை தனது துதிக்கையில் வைத்து அருகில் ஓடிக்கொண்டிருக்கும் தேன்போன்று இனிக்கும் ஓடையில் |