107. திருப்பாற்கடல் பையர விண்ணைப் பாற்கடலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி உய்யவுலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான்முகனை வையமனிசரைப் பொய் யென்றெண்ணிக் காலனையு முடனே படைத்தாய் ஐ யனி யென்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளியானே -427 பெரியாழ்வார் திருமொழி 4-10-5
| பரமபதத்தில் வீற்றிருக்கும் பரமபதநாதன் பூவுலகைப் படைக்க எண்ணினான். மனிதர்களையும் செடிகொடிகளையும், மலை கடலையும் படைக்க எண்ணினான். உடனே தன்னை வ்யூக நிலைக்கு (ஆக்கல், காத்தல், அழித்தல் மற்றும் எல்லாம் செய்யவல்ல தேவர்களையும் படைக்க எண்ணி) மாற்றித் திருப்பாற்கடலுக்கு எழுந்தருளினான். பரமபதத்தில் இருந்தால் சிங்காசனமாக திகழ்ந்த ஆதிசேடன் திருப்பாற்கடலில் மெத்தையாகத் தன்னை விரித்துக்கொள்ள எம்பெருமான் சயன திருக்கோலத்தில் அணிகிளர் அரவின் அறிதுயிலமர்ந்த மணிவண்ணனாக அதாவது உலகமெல்லாம் வாழ உள்ளத்தில் சங்கல்பம் செய்து உறங்குவது போல உணர்வகலாது சயனித்திருப்பதே அரிதுயில் என்னுமாப்போலே எழுந்தருளினான் (உறங்குவான் போல் போகு செய்து என்று நம்மாழ்வார் தலைக் கட்டினாற்போலும் எழுந்தருளினான்.) உலகைச் சிருஷ்டிக்க எண்ணியவன் தன் நாபிக் கமலத்திலிருந்து செல்லும் தாமரையில் பிரம்மனைப் படைத்து உலகுண்டாக்கச் செய்தான். நிலையற்ற இம்மானிடத்தை அழிக்க எமனையும் படைத்தான். இவ்விதமான பரமேனே நீ தான் திருவரங்கத்திலே அர்ச்சாரூபியாக எழுந்தருளியுள்ளாய். என்னைக் காக்க வேண்டும் ஐயனே என்று பெரியாழ்வார் திருப்பாற்கடலில் எம்பெருமான் எழுந்தருளியிருப்பதை மங்களாசாசனம் செய்கிறார். திருப்பாற்கடல் என்பது இந்நிலவுலகில் இல்லை. பரமபதம் போன்று அதுவும் விண்ணுலகிலேயே உள்ளது. இந்த ஸ்தூல சரீரத்துடன் அங்கு செல்ல முடியாது. 106 திவ்யதேசங்களைச் | |
|
|