சேவித்தபின் இறைவன் திருவடிப்புகச் செல்லும் பக்தன் ஒருவனை பெருமாளே திருப்பாற்கடலுக்கு நேரில் அழைத்துச் சென்று சேவை சாதிக்கிறான் என்பது ஐதீஹம். இதற்கு வெள்ளையந் தீவு என்ற பெயருமுண்டு. சஷீராப்தி என்னும் இந்த பாற்கடலில் பக்தர்களின் தரிசனத்திற்காக தன்னை வ்யூகப்படுத்தி அதாவது பல பிரிவாகப் பிரித்து வியூக வாசுதேவன் என்ற திருநாமத்தோடு யோக நித்திரையில் தம்மைச் சங்கர்ஷணன், ப்ரத்யுமனன், அநிருத்தன் என்னும் 3 உருவங்களாகப் பிரித்து ஆதிசேடனின் படுக்கையில் நிலமகளும் திருமகளும் திருவடி வருட பள்ளி கொண்ட நிலையாகும் திருப்பாற்கடல் வடிவம். “செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன் திருவடியி னினை வருட முனிவரேத்த வங்கமலி தடங்கடலுள் அனந்தனென்னும் வரியர வின்னணைத் துயின்ற மாயோன் காண்மின்” (1618) என்கிறார் திருமங்கை
| இதில், கிழக்குப் பக்கம் சிரிப்புடன் கூடின - வாசுதேவனாகவும் தெற்கு நோக்கி சிங்கமுகமாக - சங்கர்ஷணனும் வடக்கு - பிர்த்யுமனனாகவும் மேற்கு - அநிருத்தனாகவும் திகழ்கிறார். வரலாறு பக்தர்களின் அபயக் குரல், குறிப்பாக தேவர்களின் அபயக் குரல் கேட்டு பகவான் அபயமளிப்பது இவ்விடத்தில்தான் அதனால் இவ்வுலகுக்கு கூப்பாடு கேட்கும் உலகு என்று பெயர் பாட்டுக்கேட்டும் உலகான பரமபதத்திற்கு தேவர்களும் செல்ல முடியாது. அது சித்திப்பது நித்ய சூரிகள் எனப்படும் முக்தர்கட்கு மட்டும்தான். எனவேதான் தேவர்கள் தங்கட்கு பிரச்சினை வரும்போதெல்லாம் அல்லது பிரச்சினைகளை உண்டாக்கிக் கொண்டு அல்லற்படும்போதெல்லாம் திருப்பாற்கடல் கரையருகில் நின்று எம்பெருமானை பள்ளியெழுப்பித் தமது முறையீட்டைத் தெரிவிப்பது வழக்கமாம். ப்ரளய காலம் வரைதான் திருப்பற்கடல் வாசம். ப்ரளய காலம் முடிந்ததும் மீண்டும் பரமபதம். எனவே ப்ரளய காலத்தில் திவ்யதேசங்கள் மீண்டும் அவனுள் ஐக்கியமாகிவிடுகின்றன. திவய்தேசங்களுக்குத் தொடக்க திவ்யதேசமாகவும் இதனைக் கொள்ளலாம். |