பக்கம் எண் :

674

     சங்கர்ஷணன் அநிருத்தன், ப்ரத்யுமனன் என்னும் 3 உருவங்களும்
ப்ரளயகாலத்தில் வ்யூக வாசுதேவனோடு ஐக்கியமாகி விடுகின்றன.

மூலவர்

     பாற்கடல் வண்ணன் (சஷீராப்திநாதன்) ஆதிசேடன் மேல் தெற்கு
நோக்கிய சயனம்

தாயார்

     கடல்மகள் நாச்சியார், ஸ்ரீபூமாதேவி

தீர்த்தம்

     அமிர்த தீர்த்தம், திருப்பாற்கடல்

விமானம்

     அஷ்டாங்க விமானம்

காட்சி கண்டவர்கள்

     பிரம்மனும் சிவனும்

சிறப்புக்கள்

     1. ஒரு பாடலால் மட்டும் சில ஸ்தலங்களை ஆழ்வார்கள்
மங்களாசாசனம் செய்துள்ளனர். சில ஸ்தலங்களை ஒரே வார்த்தையால் மட்டும்
மங்களாசாசனம் செய்துள்ளனர். சில ஸ்தலங்களை இரண்டு மூன்று
ஆழ்வார்களும் சிலவற்றை 7 ஆழ்வார்களும் குறிப்பிட்ட ஒன்றிரண்டு
ஸ்தலங்களை 10 ஆழ்வார்களும் மங்களாசாசனம் செய்துள்ளனர். ஆனால்
நிலவுலகில் இல்லாத இந்த திருப்பாற்கடலை ஒட்டுமொத்தமாக பத்து
ஆழ்வார்களும் மங்களாசாசனம் செய்துள்ளனர். மொத்தம் 51 பாக்களை
நல்கியுள்ளனர்.

     2. இங்கு பெருமாள் வெண்மை நிறத்தில் இருக்கிறார். இங்கு எல்லாமே
வெண்மை, எங்கு நோக்கிலும் வெண்மை, அதனால்தான் வெள்ளை
வெள்ளத்தின் மேலொரு நாகத்தை மெத்தையாக விரித்து அதன்மேல் கள்ள
நித்திரை கொள்கின்ற கள்வன் என்கிறார் ஆழ்வார். இப்பெருமானின்
வண்ணம் வெண்மை என்பதை திருமங்கை யாழ்வார் முன்னை வண்ணம்
பாலின் வண்ணம் என்கிறார். அதாவது விபவ அவதாரங்கட்கு முன்
(உலகைப்படைத்து இங்கு அவதாரங்களை நிகழ்த்துவதற்கு முன்) பாற்கடலில்
எழுந்தருளியதை பாலின் வண்ணம்