| என்கிறார். பிறகுதான் விபவ அவதாரத்தில் நிலைநின்ற பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் என்றார். முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலை நின்ற பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணமென்னுங்கால் பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி இன்னவண்ண மென்று காட்டீரே இந்தளூரிரே - 1335
| திருமங்கையாழ்வாருக்கே மயக்கு ஏற்பட்டுவிட்டது. பாற்கடலில் வெண்மை வண்ணத்தினன். விபவ அவதாரத்தில் நீலமேகமன்ன கொண்டல் வண்ணம். பின்னும் ஒவ்வொரு அவதாரத்திலும் ஒவ்வொரு வண்ணம். எம்பெருமானே உன் உண்மையான வண்ணம் தான் என்னவென்று காட்டமாட்டாயா என்று ஏங்குகிறார். எவ்வண்ணமாயினும் திருப்பாற்கடலில் பெருமாளின் வண்ணம் வெண்மை வண்ணமென்பதில் ஐயமில்லை. ஆண்டாளும், “தெண்டிரைக் கடற் பள்ளியாய்” என்கிறார். தெள்ளிய நீரலைகளையுடைய கடலில் பள்ளி கொண்டவனே என்கிறார். தெள்ளத் தெளிவான நீரின் வண்ணம் வெண்மையன்றோ? அவ்வாறெனில் அதில் உள்ள பெருமாளும் வெண்மை நிறம்தானே. 3. இங்குதான் பிரம்மதேவன் படைக்கப்பட்டான். இது வொன்றே இதன் தனிச்சிறப்பம்சமாகும். தலைப்பிலிட்ட பாடலாலும் இதனையறியலாம். 4. திருப்பாற்கடல் விண்ணில் எங்கோ உள்ளது. ஆனால் வடநாட்டுத் தலங்களில் ஒன்றாக இதனைக் கொண்டு நாற்றெட்டுத் திருப்பதிகளில் கணக்கிடப்பட்டுள்ளது. நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியிலும் அவ்வண்ணமேயுள்ளது. மேலும் அவ்வட நாடாறிரண்டு என்று சொல்வதற்கொப்ப வடநாட்டில் சொல்லப்பட்ட 12 தலங்களில் இதுவும் ஒன்றாகக் கணக்கிடப்பட்டு (ஆழ்வாரின் பாசுரங்களில் வங்கமலி தடங்கடல் என்றும் வங்கக் கடல் கடைந்த என்றும் கூறப்படுவதால்) இந்தியாவில் வடக்கே உள்ள வங்காள விரிகுடாவின் |