பக்கம் எண் :

677

     6. ஸ்ரீமகாவிஷ்ணுவின் பஞ்ச வ்யூகங்கள் (திருமால் தனது 5 நிலைகளில்
தோன்றுதல் இங்குதான் ஆரம்பமாகிறது)

     அ) திருப்பாற்கடலுக்கு சஷ்ராப்தி நாதனாக (பாற்கடல் வண்ணனாக)
வந்துற்றது முதல் வாசுவேதன் அநிருத்தன். ப்ரத்யுமணன், சங்கர் ஷ்ணன்
என்றும் 4 வியூகங்களாகப் பிரிந்த நிலைகளும் சேர்ந்து பஞ்ச வ்யூகங்கள்
ஆகும். இந்த வ்யூக மூர்த்திகட்கும் சில திவ்யதேசங்கட்கும் தொடர்புண்டு.

1. சஷ்ஷிராப்தி நாதன் என்னும் பாற்கடல் வண்ணன்

     திருக்கோட்டியூர் உரக மெல்லனையாளனாக ஸ்ரீதேவி பூமிதேவியுடன்
எழுந்தருளியது.

2. வாசுதேவன்

     திருநறையூரில் திருமகளை மணந்த திருக்கல்யாணக் கோலம்

3. அநிருத்தன்

     திருஅன்பில் அழகிய வல்லிநாச்சியாருடன் அருளல்

4. ப்ரத்யுமனன்

     திருவெள்ளறை இங்கு ஸ்ரீதேவி மனித உருவில் நின்று கைங்கர்யம்

5. ஸங்கர்ஷ்ணன்

     உறையூர் கமலவல்லி என்ற பெயரில் சோழன் மகளாக வளர்ந்த
திருமகளை மணத்தல் அதாவது பாற்கடலில் முதல்நிலையில் தேவிமாரோடு
எழுந்தருள்கிறான். இதர வ்யூகங்கட்கு பிராட்டிகள் திவ்யதேசங்களில் 4
நிலைகளில் நின்ற பெருமாளைச் சேர்ந்து எழுந்தருள்கின்றனர் என்பதும்
ஐதீஹம்.