பக்கம் எண் :

680

தீர்த்தம்

     விரஜா நதி, அயிரமத புஷ்கரிணி

காட்சி கண்டவர்கள்

     ஆதிசேடன், கருடன், நித்யசூரிகளும், முக்தர்களும்.

சிறப்புக்கள்

     1. இங்கு செல்லும் ஜீவாத்மாக்கள் நித்யசூரிகள் ஆகின்றன. அதாவது
எப்போதும் அழிவற்ற சக்தியைப் பெறுகின்றன. இங்கு பகவானைப் போலவே
ஸ்வரூபம் அவர்கட்கும் உண்டாகிறது. ஆயினும் பகவானோடு இரண்டறக்
கலக்காமல் உடனிருந்துகைங்கர்யம் செய்து கொண்டு எப்போதும்
பல்லாண்டிசைத்துக் கொண்டிருப்பர்.

     2. நமக்கு இந்தப் பூவுலகில் இருக்கும்போதும் விசும்பைப் பற்றி
(ஆகாயத்தப் பற்றி) ஒன்றும் புரியாத புதிராக இருக்கும் நித்ய சூரியாகி இங்கு
சென்றுவிட்டால் படைப்புகளும், பிரபஞ்சங்களும் என்னவென்று தெளிவாகத்
தெரிவதால் இதற்கு தெளிவிசும்புத் திருநாடு என்று பெயர்.

     3. இதற்குமேல் அறிவதற்கு ஒன்றுமில்லையாதலால் இதற்கு எல்லைநிலம்
என்பது பொருள்

     4. இங்கு அடையும் இன்பத்திற்கும் நலத்திற்கும் முடிவே இல்லாததால்
நலமந்தமில்லதோர் நாடு என்பதும் இதற்குப் பெயர். இங்கு கிடைக்கும்
இன்பத்திற்கு “அந்தமில் பேரின்பம்” என்று நம்மாழ்வார் பெயர்
சூட்டியுள்ளார். அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்தமை என்று தனக்கு
வைகுந்தம் அளிப்பதாக பாடுகிறார். திருப்புளியாழ்வார் அடியிலே
இருந்துகொண்டு மற்ற திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்ததுபோல்
வைகுந்தம் சென்றதாகவும் பாடுகிறார்.

     5. வாசுதேவன் வைகும்படியான (வாழும்படியான) இருப்பிடமாதலால்
வைகுந்தம் என்றும் பெயருண்டு.
 

     வைகுந்தா மணிவண்ணனே என்பொல்லா திருக்குறளா
     வைகும் வைகல்தோறும் அமுதாய வானேறே
                             என்கிறார் நம்மாழ்வார்.