அதற்கடுத்து (ஸத்யவருதம்) காஞ்சிபுரத்தில் அளவற்ற புண்ணியத்தை விளைவிக்கப் பாய்கிறது. அதற்கப்பால் நதிகளில் சிறந்த காவேரி சகலவிதமான பாவங்களையும் போக்கவல்லதாய் தென்திசையில் பாய்கிறது. அதனினும் அதன் கிளைகளிலும் அரங்கம், குடந்தை, நாகை, என பல திவ்யதேசங்கள் உள்ளன. அதற்கப்பால் (காவேரிக்கப்பால்) விருஷபாசலம் என்ற விஷ்ணு சேத்திரம் (அழகர்கோவில்) உள்ளது. இதில் இஷ்ட சித்தி தீர்த்தம் என்று நினைத்ததை முடிக்கும் வரந்தரும் தீர்த்தம் உள்ளது. அதற்கப்பால் தாமிரபரணி (தட்சிண கங்கை) 18 தீர்த்தங்களுடன் கலந்து சகலருக்கும் சகல பாவத்தையும் போக்குவதாயுள்ளது. இதில்தான் நவத்திருப்பதிகள் அமைந்துள்ளன. கங்கை நதி எம்பெருமானின் உலகளந்த வலது காலில் உதித்தது. காவிரியோ எம்பெருமானின் 2 பாதங்களிலும் பிறந்தவள். எனவே கங்கையிற் புனிதமாய காவிரி என்று பிரம்மாண்ட புராணம் வர்ணிக்கிறது. 12 ஆண்டுகட்கு ஒரு முறை மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் பாகீரதி காவிரியைக் கூடி சைய மலையில் குடகு மலையில் திருமாலடி சேர்ந்து அகண்ட காவிரியிற் கலக்கிறது. திருவரங்கத்தில் சந்திர புஷ்கரணியில் ஒரு நாளும், குடந்தையில் சங்க புஷ்கரணியில் ஒரு நாளும், தில்லையில் புண்டரீக புஷ்கரணீயில் ஒரு நாளும் கங்கை காவிரியோடு கலப்பதால் இதற்கு தட்சிண கங்கை என்று பெயர். 5. அட்டமா சித்திகள் 1. அனிமா - மிகச்சிறிய உயிர்களிடம் அவற்றிலுஞ் சிறிய உருவாய் இறைவன் கலந்திருப்பது. 2. மகிமா - ஐம்பூதத் தத்துவங்களில் அகமும் புறமும் இடையறாது நிற்றல். 3. லகிமா - மலைபோல் பாரமாய் இருந்தாலும் பரமானுக்கள் போல் இருத்தல் 4. கரிமா - பரம அணு போன்ற வடிவமாய் இருந்தாலும் மாபெரும் மலை போன்று கனத்திருத்தல். |