பக்கம் எண் :

685

     5. பிராப்தி   -  எப்பொருளை விரும்புகின்றனரோ
                   அப்பொருளை பெறல்.
     6. பிரகாமியம் - தன் உடலை விட்டுப் பிற
                   உடலிற்புகுதல். (கூடு விட்டு
                   கூடு பாய்தல்)
     7. ஈசத்வம்   - கடவுட் தன்மை அடைதல்
     8. வசித்வம்  - மனிதர், விலங்கு, ஊர்வன, பறப்பன
                  முதலிய எல்லாவகை உயிர்களையும்
                  தம் வயப்படுத்திக் கொள்தல்.

6. துளசியைப் பற்றி பாத்ம புராணம்

     1. எந்த இடத்தில் துளசிச் செடி வளர்ந்திருக்கிறதோ அங்கே
மும்மூர்த்திகளுடன் சகல தேவதைகளும் வாசம் செய்கிறார்கள். சூரியனைக்
கண்டதும் இருள் மறைவது போல் துளசியின் காற்றுப் பட்டாலே பாவங்களும்
ரோகங்களும் விலகி விடும். துளசி இலையைத் தெய்வப் பிரசாதமாக
உண்பவர்க்கு சகல பாவங்களும் தொலையும்.

     2. எவரது இல்லத்தில் துளசிச்செடிகள் நிறைய இருக்கிறதோ அந்த
இடம் புண்ணியமான திருத்தலம். அங்கு அகால மரணம், வியாதி முதலியன
ஏற்படாது. துளசிச் செடிகளைத் திருமாலின் அம்சமாக மதித்துப் பூஜை செய்ய
வேண்டும். துளசி தளத்தால் திருமாலை அர்ஜனை செய்து பூசிப்பவருக்கு
மறுபிறவி கிடையாது.

     அனுமார் இலங்கையில் சீதா தேவியைத் தேடி அலைந்தபோது ஒரு
மாளிகையில் துளசி மாடத்தையும் நிறைய துளசிச் செடிகளையும் கண்டு இங்கு
யாரோ ஒரு விஷ்ணு பக்தர் இருக்கிறாரென்று ஊகித்தாராம். அங்கு இறங்கி
விசாரித்தபோது அது விபீஷணரின் மாளிகை என்று தெரியவந்ததாம்.

     சீதை துளசியை பூஜை செய்ததின் பயனாக அவளுக்கு ராமபிரான்
கணவராக கிடைத்தாரென்று துளசி ராமாயணம் கூறுகிறது.

     விஷ்ணு பூஜைக்குப் பிறகு சந்தன தீர்த்தத்துடன் துளசி தளத்தைப்
பிரசாதமாகப் பெறுவது பக்தர்கட்கு உவப்பானதாகும். இதைச் சரணாமிர்தம்,
தீர்த்த